தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிஎஸ்ஜி குழுவில் இத்தாலி கோல்காப்பாளர்

1 mins read
fce80c5a-7a05-43ac-a40e-989cec2ce91f
-

பாரிஸ்: இத்­தாலிய காற்­பந்து அணி­யின் கோல்காப்­பா­ளர் கியான்­லூகி டோனா­ரும்மா ஐந்­தாண்டு ஒப்­பந்­தத்­தில் பாரிஸ் செயிண்ட் ஜெர்­மைன் குழு­வில் இணைந்­துள்­ளார்.

யூரோ 2020 இறுதி ஆட்­டத்­தில் பெனால்டி வாய்ப்­பில் இங்­கி­லாந்­தின் இரண்டு கோல் முயற்­சி

­க­ளைத் தடுத்து, இத்­தாலி கிண்­ணத்­தைக் கைப்­பற்ற முக்­கிய கார­ண­மாக இருந்­த­வர் டோனா­ரும்மா.

இவர், இது­வரை 215 சிரி ஏ, 16 யூரோப்பா லீக் மற்­றும் 12 இத்­தா­லிய கிண்­ணப் போட்­டி­க­ளி­லும் விளை­யா­டி­வுள்­ளார்.

ஏசி மிலான் காற்­பந்­துக் குழு­விற்­காக விளை­யாடி வந்த இவர், இல­வ­ச­மாக பிஎஸ்ஜி குழு­விற்­குச் சென்­றுள்­ளார்.

ஆனால், ஏற்­கெ­னவே பிஎஸ்ஜி குழு­வின் கோல்­காப்­பா­ள­ரான கெய்­லர் நவா­ஸுக்கு இவ­ருக்­கும் இடையே போட்டி நில­வும் என்று கூறப்­ப­டு­கிறது.

இந்த பரு­வத்­தில் பிஎஸ்ஜி குழு இல­வ­ச­மாக வாங்­கி­யுள்ள மூன்­றா­வது ஆட்­டக்­கா­ரர் இவர்.

ஏற்­கெ­னவே ஸ்பா­னிய வீரர் செர்­ஜியோ ரமோஸ், லிவர்­பூ­லின் ஜெர்ஜினியோ வைன்ஹால்டம் ஆகிய இரு­வ­ரை­யும் அக்­குழு

வாங்­கி­யி­ருந்­தது.