சான்சோ: இனவாத கருத்துகள் எனக்கு புதிதல்ல

சான்சோ: இனவாத கருத்துகள் எனக்கு புதிதல்ல

1 mins read
695b46ef-1c96-43a9-b6b7-4855156130ea
-

லண்­டன்: இன­வா­தக் கருத்­து­களை எதிர்­கொள்­வது தனக்கு புதி­தல்ல என்று கூறி­யுள்­ளார் இங்­கி­லாந்­தின் நட்­சத்­திர வீரர் ஜேடன் சான்சோ.

யூரோ காற்­பந்­துத் தொட­ரில் இத்­தா­லிக்கு எதி­ரான இறுதி ஆட்­டத்­தில் தான் கோல் போட தவ­றி­ய­தற்கு சான்சோ மன்­னிப்பு கேட்­டார். இ­தைத் தொடர்ந்து, அவர் மீது இண­யத்­தில் இன­வாத கருத்­து­கள் கூறப்­பட்­டது குறித்து அவர் இவ்­வாறு கூறி­யுள்­ளார்.

யூரோ காற்­பந்து தொட­ரின் இறுதி ஆட்­டத்­தில் இங்­கி­லாந்து தோற்ற பிறகு மூன்று கறுப்­பின விளை­யாட்­டா­ளர்­க­ளைக் குறி­வைத்து இணை­யத்­தில் இன­வாத கருத்­து­கள் கூறப்­பட்­டன.

"நானும் எனது சகோ­த­ரர்­க­ளான மார்­கஸ், புக்­கா­யோ­வும் இது­வரை இன­வாத கருத்­து­களை எதிர்­கொண்­ட­தில்லை என்­பது போல் நடிக்க போவ­தில்லை. இது ஒன்­றும் புதி­தல்ல.

"வெறுப்­பால் எதை­யும் வெல்ல முடி­யாது. இது­போன்ற இன­வாத கருத்­து­களை எதிர்­கொண்ட இளம் வய­தி­னர், நிமிர்ந்து நின்று தங்­கள் கனவை நோக்கி ஓட­வேண்­டும்," என்று அவர் டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார்.