கட்டுப்பாடுகள் சிலவற்றை மலேசியா தளர்த்தும்

கட்டுப்பாடுகள் சிலவற்றை மலேசியா தளர்த்தும்

1 mins read
e99180c9-ed3a-4726-b5c7-ae59b24cc8ac
-

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரிலுள்ள சில கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டை மலேசியா இன்று நள்ளிரவு முதல் நிறுத்திவைக்கும்.

சுகாதார அமைச்சின் வாதங்களைக் கருத்தில்கொண்டு தேசிய பாதுகாப்பு மன்றம், மேம்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டை மேலும் நீட்டிக்கப்போவதில்லை என்று மலேசியாவின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மலேசியாவின் தினசரி சராசரி எண்ணிக்கை 1,8000க்கும் 1,9000க்கும் இடையே அதிகரித்ததை அடுத்து அந்தக் கட்டுப்பாடுகள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் விதிக்கப்பட்டன.