குறைந்தது 120 பேர் பலி

குறைந்தது 120 பேர் பலி

2 mins read
1e9ded0c-b2c5-4f8d-bb21-6739ad372e4d
-

மேற்கு ஐரோப்பிய நாடுகளை மிரட்டும் கனமழை, வெள்ளம்

பெர்­லின்: கடந்த பல பத்­தாண்­டு­களில் கண்­டி­ராத ஆக மோச­மான வெள்­ளம் கார­ண­மாக ஜெர்­ம­னி­யில் நூற்­றுக்கு மேற்­பட்­டோர் உயி­ரி­ழந்து­விட்­ட­னர்; குறைந்­தது 1,300 பேரைக் காண­வில்லை.

மேற்கு ஐரோப்­பா­வில் பெரு­மழை பெய்து வரு­வ­தால் ஆறு­கள் கரை­களை உடைத்­துக்­கொண்டு ஓடி, பேர­ழிவை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன.

கன­ம­ழை­யா­லும் வெள்­ளத்­தா­லும் பெல்­ஜி­யத்­தி­லும் 22 பேர் மாண்டு­விட்­ட­தாக பிபிசி செய்தி தெரி­விக்­கிறது. சுவிட்­சர்­லாந்து, நெதர்­லாந்து, லக்­சம்­பர்க் ஆகிய நாடு­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

பாதிக்­கப்­பட்­டோர்க்கு முழு ஆத­ரவு வழங்க ஜெர்­மா­னிய பிர­த­மர் ஏஞ்­சலா மெர்­கல் உறு­தி­ய­ளித்­துள்­ளார். அவர் அதி­கா­ர­பூர்வ பய­ண­மாக அமெ­ரிக்கா சென்­றி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஜெர்­ம­னி­யில் ஆக மோச­மாக பாதிக்­கப்­பட்ட அர்­வெய்­லர் மாவட்­டத்­தில், ஷுல்டு எனும் சிற்­றூ­ரில் ஆறு வீடு­கள் வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்­பட்­டன; பல வீடு­கள் இடிந்­து­வி­ழும் நிலை­யில் உள்­ளன.

ஆயி­ரக்­க­ணக்­கா­னோ­ரின் நிலை தெரி­ய­வில்லை என்­ப­தால் பலி எண்ணிக்கை அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று அம்­மா­வட்ட நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது.

ஏறக்­கு­றைய 15,000 காவல்­துறை­யி­னர், படை­வீ­ரர்­கள், அவ­ச­ர­கால சேவைப் பணி­யா­ளர்­கள் தேடி, மீட்­கும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர். கூரை­களில் தஞ்­ச­ம­டைந்­தோர் ஹெலி­காப்­டர்­கள் மூலம் மீட்­கப்­படு­கின்­ற­னர்.

பெல்­ஜி­யத்­தின் மூன்­றா­வது பெரிய நக­ர­மான லீஜில் இருந்து மக்­கள் வெளி­யே­றும்­படி உத்­த­ர­விடப்­பட்­டுள்­ளது. அந்­ந­க­ரின் ஊடாக ஓடும் மேஸ் ஆற்­றில் நீர்­மட்­டம் 1.5 மீட்­டர்­வரை உய­ர­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இத­னால், அப்­ப­கு­தி­யில் உள்ள ஒர் அணை­யும் உடை­யக்­கூ­டும் என அதி­கா­ரி­கள் அஞ்­சு­வ­தால், மக்­கள் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் உத­வும்­படி வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

நெதர்­லாந்­தின் வல்­கென்­பர்க் நக­ரின் மையப் பகு­தியை வெள்­ளம் சூழ்ந்­துள்­ளது. இதை­ய­டுத்து, அவ்­வி­டத்­தில் அமைந்­துள்ள பல தாதிமை இல்­லங்­களில் இருப்­போர் பாது­காப்­பாக வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

அந்­நாட்­டில் இது­வரை வெள்­ளத்­தால் உயி­ரி­ழப்பு எது­வும் ஏற்­ப­ட­வில்லை. இருப்­பி­னும், மேஸ் ஆற்­றின் ஓர­மாக அமைந்­துள்ள நக­ரங்­களில், சிற்­றூர்­களில் இருந்து மக்­கள் வெளி­யேற அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­னர்.