லண்டன்: பிரிட்டனில் நாளை மறுநாள் முதல் சமூக இடைவெளிக் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படவுள்ளன. இந்நிலையில், கொவிட்-19 பரவல் கட்டுக்கடங்காமல் போனால் கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படலாம் என்று அரசாங்கம் எச்சரித்து உள்ளது. அங்கு நேற்று முன்தினம் புதிதாக 48,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மருத்துவ மனைகளை நாடியோர் எண்ணிக்கை 42.8% கூடியது.
இதற்கிடையே, அமெரிக்காவின் எல்லா மாநிலங்களிலும் கொரோனா பரவல் கூடியிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து ஆறாவது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொரோனா தொற்றியதை அடுத்து, இன்று நள்ளிரவு முதல் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது.

