பிரான்சில் கிருமிப் பரவல் மீண்டும் அதிகரித்து உள்ளதைத் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்க அந்நாடு முடிவு செய்துள்ளது.
நாளை முதல் பிரிட்டன், ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து செல்லும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகள் தொற்று இல்லை என்பதற்கான பரிசோதனை சான்று அளிக்க வேண்டியது அவசியம்.
பிரான்சிலிருந்து செல்பவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தாலும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரிட்டன் அறிவித்த பிறகு, பிரான்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

