ஒலிம்பிக் கிராமத்தில் கிருமித்தொற்று

ஒலிம்பிக் கிராமத்தில் கிருமித்தொற்று

1 mins read
898c26c7-4d00-4296-a28c-96b392d36837
படம்: ராய்ட்டர்ஸ் -

ஒலிம்பிக் விளையாட்டாளர்கள் தங்கியிருக்கும் இடத்தில் ஒருவருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக நடத்தப்படும் சோதனையின் போது, ஒலிம்பிக் போட்டியை ஏற்பாடு செய்ய வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவரைப் பற்றிய வேறெந்த விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த தொற்று சம்பவம், ஒலிம்பிக் போட்டிகள் பாதுகாப்பாக நடைபெறும் என்று ஜப்பான் அளித்த உறுதி குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.