87.1% மக்கள் நீட் தேர்வை விரும்பவில்லை

87.1% மக்கள் நீட் தேர்வை விரும்பவில்லை

1 mins read
0c164d59-17de-483d-910b-4a48e76abf2a
-

சென்னை: கல்­விப் பாதுகாப்புக் கூட்­ட­மைப்பு என்ற அமைப்­பின் சார்­பில், "நீட் தேர்வு தமிழ்­நாட்­டிற்­குத் தேவையா?" என்ற தலைப்­பில் பொது­மக்­கள் பங்­கேற்ற கருத்­துக்­க­ணிப்பு அறிக்கை முடி­வு­கள் நேற்று வெளி­யி­டப்­பட்­டன. இதில், பெரும்­பா­லா­னோர் அதா­வது 87.1% மக்­கள் நீட் தேர்வை விரும்­ப­வில்லை என்ற கருத்தை முன்வைத்­துள்­ள­னர். வெறும் 11.9% மக்­கள் மட்­டும் நீட் தேர்வை விரும்பு­வ­தா­கக் கூறி­னர்.

நீட் தேர்­வி­னால் தமி­ழக மாணவர்கள்­ பெரும் பாதிப்­புக்கு உள்­ளா­வ­தாக 90.5% மக்­கள் கருத்­துத் தெரி­வித்­த­னர். இந்­தக் கருத்­துக்­க­ணிப்­பில் 42,834 பேர் பங்­கேற்­ற­னர். அவர்­க­ளி­டம் ஒன்­பது முக்­கி­யக் கேள்­வி­கள் முன்­வைக்­கப்­பட்­டன.