தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு ஆசிரியைகள் தலைமறைவு

2 mins read
8feac443-6329-48bb-b87f-abf1908350be
சிவசங்கர் பாபா (நடுவில்). படம்: ஊடகம் -

சென்னை: சென்னை, கேளம்­பாக்­கத்­தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்­டர்­நே­‌ஷ­னல் பள்­ளியை நடத்தி வந்த சிவ­சங்­கர் பாபா மீது முன்­னாள் மாண­வி­கள் பாலி­யல் குற்­றச்­சாட்டு தெரி­வித்து இருந்­த­னர். அதன் அடிப்­ப­டை­யில் சிவ­சங்­கர் பாபா மீது போலி­சார் வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை நடத்­தி­னர்.

பின்­னர் இந்த வழக்கு விசா­ரணை சி.பி.சி.ஐ.டி. போலி­சுக்கு மாற்­றப்­பட்­டது.

மாண­வி­கள் அளித்த புகா­ரின் பேரில் சிவ­சங்­கர் பாபா மீது 3 வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. போக்சோ உள்­ளிட்ட சட்­டப்­பி­ரி­வு­கள் அவர் மீது பாய்ந்­துள்­ளது. சிவ­சங்­கர் பாபா­வின் செயல்­களுக்கு உடந்­தை­யாக இருந்­த­தாக ஆசி­ரி­யை­கள் சிலர் மீது குற்­றம் சாட்­டப்­பட்டு இருந்­தது. இந்த நிலை­யில் ஆசி­ரி­யை­கள் சிலர் சிவ­சங்­கர் பாபா­வுக்கு ஆத­ர­வான கருத்­து­களைத் தெரி­வித்து இருந்­த­னர்.

அவர்­க­ளி­ட­மும் விசா­ரணை நடத்த முடி­வு­செய்­யப்­பட்­டது. இதைத்­தொ­டர்ந்து கேளம்­பாக்­கம் பழ­னி­கார்­டன் பகு­தி­யில் உள்ள 5 ஆசி­ரி­யை­க­ளுக்கு நேரில் சம்­மன் கொடுக்க சிபி­சி­ஐடி போலி­சார், அந்த ஆசி­ரி­யை­க­ளின் வீடு­க­ளுக்­குச் சென்­ற­னர். ஆனால் அந்த ஐந்து பேரும் தங்­கள் வீடு­களில் இல்லை. தப்பி ஓடி தலை­ம­றை­வாகி விட்­ட­னர் என்­பது தெரி­ய­வந்­தது.

இதை­ய­டுத்து ஆசி­ரி­யை­க­ளின் வீட்டுக்கதவில் சம்­மனை போலி­சார் ஒட்­டி­னர்.

தலை­ம­றை­மா­ன­வர்­களை போலி­சார் தேடி வரு­கின்­ற­னர். ஐந்து ஆசி­ரி­யை­களும் சிவ­சங்­கர் பாபா குறித்து பல்­வேறு கருத்­து­களை தெரி­வித்­துள்­ள­னர்.

எந்த அடிப்­ப­டை­யில் இது­போன்ற கருத்­து­களை நீங்­கள் தெரி­வித்­தீர்­கள் என்­பது பற்றி விசா­ரணை நடத்­து­வ­தற்­கா­கவே போலி­சார் சம்­மனை வழங்க நேரில் சென்­ற­னர். ஆனால் அவர்­கள் அங்கு இல்லை.

இருப்­பி­னும் 5 பேரை­யும் கண்டு­பி­டித்து விரை­வில் விசா­ரணை நடத்­தப்­படும் என்று போலிசார் தெரி­வித்­த­னர்.

வரு­கிற திங்­கட்­கி­ழமை முதல் ஐந்து ஆசி­ரி­யை­க­ளை­யும் நேரில் அழைத்து விசா­ரிக்க சி.பி.சி.ஐ.டி. போலி­சார் திட்­ட­மிட்டு இருந்­த­னர். இது­போன்ற ஒரு சூழ­லில்தான் ஆசி­ரி­யை­கள் தப்பி ஓடி தலை­மறை­வாகி உள்­ள­னர்.

ஆசி­ரி­யை­க­ளி­டம் விசா­ரித்த பின் பல திடுக்­கி­டும் தக­வல்­கள் வெளி­வ­ரும் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது.