மேம்பாடு காண்கிறது ஏலகிரி மலை

மேம்பாடு காண்கிறது ஏலகிரி மலை

2 mins read
e969ce68-56d2-4119-8fc2-19713c8b8264
-

திருப்­பத்­தூர்: ஊட்டி, கொடைக்­கா­ன­லுக்கு நிக­ராக ஏல­கிரி மலை மேம்­ப­டுத்­தப்­பட்ட சுற்­றுலா தல­மாக மாற்ற திட்ட அறிக்கை தயார் செய்ய அதி­கா­ரி­க­ளுக்கு திருப்­பத்­தூர் மாவட்ட ஆட்­சி­யர் அமர் குஷ்­வாஹா உத்­த­ர­விட்­டார்.

திருப்­பத்­தூர் மாவட்­டம் ஏல­கிரி மலைக்கு உட்­பட்ட பள்­ள­க­னி­யூர் பகு­தி­யில் 25 ஏக்­கர் பரப்­ப­ள­வில் தாவ­ர­வி­யல் பூங்கா அமைக்­க­வும், 8 ஏக்­க­ரில் விளை­யாட்டு அரங்­கம் அமைக்­க­வும், நிலா­வூர் கிரா­மத்­தில் மலர் பூங்கா அமைக்க தமி­ழக அரசு நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறது.

இதற்­கான பணி­கள் தொடங்கு­வ­தற்­கான சாத்­தி­யக்­கூறுகளை மாவட்ட ஆட்­சி­யர் அமர் குஷ்­வாஹா நேற்று ஆய்வு செய்­தார். அப்­போது, செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அவர் கூறும்­போது, ''ஏல­கிரி மலை­யில் உள்ள நிலா­வூர் பகு­தி­யில் விளை­யாட்டு அரங்­கம் அமைக்க முத­லில் இடம் தேர்வு செய்­யப்­பட்­டது. அந்த இடத்­துக்கு ஆட்­சே­பனை தெரி­விக்­கப்­பட்­ட­தால் தற்­போது பள்­ள­க­னி­யூர் பகு­தி­யில் 8 ஏக்­கர் பரப்­ப­ள­வில் விளை­யாட்டு அரங்­கம் அமைக்க இடம் தேர்வு செய்­யப்­பட்­டுள்­ளது.

விளை­யாட்டு அரங்­கத்­தில் 400 மீட்­டர் ஓட்­டப்­பந்­தய தளம், காற்பந்து, கைப்­பந்து, கூடைப் பந்து, ஹாக்கி ஆகிய விளை­யாட்டு தளங்­கள், நீச்­சல் குளம், கிரிக்­கெட் பயிற்சி உள்­ளிட்ட விளை­யாட்டு தளங்­கள் அமைக்க இடம் ஆய்வு செய்­யப்­பட்­டுள்­ளது. அதே­போல, பள்­ள­க­னி­யூர் பகு­தி­யில் தோட்­டக்­க­லைத்­துறை சார்­பில் சுமார் 25 ஏக்­கர் பரப்­ப­ள­வில் தாவ­ர­வி­யல் பூங்­கா­வும் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன.

நிலா­வூர் கிரா­மத்­தில் உள்ள ஏரியைத் தூர்­வாரி ஆழப்­படுத்தி அதைச் சுற்றி மரக்­கன்­று­கள் நட்டு, சிறு­வர்­ பூங்கா அமைக்­க­வும், படகு இல்­லம் அமைக்­க­வும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. அதே­போல, அத்­த­னா­வூர் படகு இல்­லத்தை மேம்­ப­டுத்­த­வும், சிறு­வர் பூங்கா, தாவ­ர­வி­யல் பூங்கா, விளை­யாட்டு அரங்­கம், மலர் மற்­றும் பழப் பூங்கா, சாகச விளை­யாட்டு அமைப்­பு­கள் உள்­ளிட்­ட­வை­களை ஏல­கிரி மலை­யில் கொண்­டு­வர திட்­ட­மி­ட­ப்பட்டு அதற்­கான இடங்­கள் ஒவ்­வொன்­றாக ஆய்வு செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த வச­தி­கள் ஏல­கிரி மலை­யில் ஏற்­ப­டுத்­தி­னால் அடுத்த 2 ஆண்­டு­களில் சுற்­று­லாப் பய­ணி­கள் வருகை அதி­க­ரிக்­கும். அதன்­மூ­லம் மலை­வாழ் மக்­க­ளின் வாழ்­வா­தா­ரம் மேம்­படும். மாவட்­டத்­துக்­கும் பல்­வேறு வளர்ச்­சி­கள் ஏற்­படும்.

ஊட்டி, கொடைக்­கா­னல் போல ஏல­கிரி மலையை மேம்­ப­டுத்­தப்­பட்ட சுற்­றுலாத் தல­மாக மாற்ற திட்ட அறிக்­கையை தயார் செய்து விரை­வாக வழங்­கு­மாறு பொதுப் பணித்­துறை, தோட்­டக்­க­லைத்­துறை, விளை­யாட்­டுத்­துறை, வரு­வாய் துறை உள்­ளிட்ட துறை சார்ந்த அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது," என்­றார் திருப்­பத்­தூர் மாவட்ட ஆட்­சி­யர் அமர் குஷ்­வாஹா.