பெர்லின்: கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஜெர்மனியில் மட்டும் மாண்டோர் எண்ணிக்கை 133ஆக உயர்ந்துள்ளது.
வெள்ள நீர் வடியும்போது மேலும் சடலங்கள் தெரியக்கூடும் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
ஜெர்மனியில் போலிசார், ராணுவ வீரர்கள் மற்றும் அவசர நிலை பணியாளர்கள் என சுமார் 15,000 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, வெள்ளம் சற்று குறையத் தொடங்கியதையடுத்து சிலர் தங்களது இருப்பிடங்
களுக்குத் திரும்ப தொடங்கியுள்ளனர்.

