தாய்லாந்தில் ஒன்றுகூடுவதற்கு தடை

தாய்லாந்தில் ஒன்றுகூடுவதற்கு தடை

1 mins read
46ca5e81-4cec-40ca-b8e6-639bff498a8d
-

பேங்­காக்: தாய்­லாந்­தில் பொது இடங்களில் ஒன்­று­கூடுவதற்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

தாய்­லாந்தின் ஒரு சில நக­ரங்­களில் கிரு­மிப் பர­வல் கட்­டுப்­பா­டு­கள் ஏற்­கெ­னவே நடப்­பில் இருந்­தா­லும், தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்­கை­யும் உயி­ரி­ழப்­பும் நேற்று ஆக அதி­க­ள­வில் பதி­வா­ன­தைத் தொடர்ந்து நாடு முழு­வ­தும் இந்த கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று அங்கு 10,082 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­னர், 141 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

பொது இடங்களில் ஒன்று கூடுவதற்கான தடையை மீறு

­வோ­ருக்கு அதி­க­பட்­ச­மாக இரண்டு ஆண்டு சிறைத் தண்­ட­னையோ அல்­லது 40,000 பாட் வரை (S$1,655) அப­ரா­தமோ அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­டக்­

கூ­டும் என்று வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று வெளி­யான அர­சாங்க அறி­விப்பு கூறு­கிறது.

தொற்று பரவக்கூடிய அதிக அபா­ய­முள்ள இடங்­களில் சென்ற திங்­கட்­கி­ழமை முதல் கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­பட்டுவிட்டன. அவ்விடங்களில் இரவு 9 மணி முதல் அதி­காலை 4 மணி வரை ஊர­டங்கு விதிக்­கப்­பட்­டுள்­ளது.

"வேக­மாக பர­வக்­கூ­டிய ஆல்பா, டெல்டா வகை

கொவிட்-19 தொற்­றால் ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து

கிரு­மிப் பர­வல் மோசமடைந்து வருகிறது.

"எனவே, கட்­டுப்­பா­டு­க­ளைக் கடு­மை­யாக்­கு­வது குறித்து அர­சாங்­கம் பரி­சீ­லித்து வரு­கிறது.

"மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, அத்தியாவசியமற்ற வர்த்தகங்கள் மூடப்படக்கூடும்," என்று தாய்லாந்து பிர­த­மர் பிர­யுத் சான் ஓசா ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

"நிலைமை ஆரா­யப்­பட்டு, கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­படும்," என்று கொவிட்-19 பணிக்­கு­ழு­வின் பேச்­சா­ளரும் சொன்னார்.