அதிகரிக்கும் தொற்று; சிட்னியில் கடுமையான கட்டுப்பாடுகள்

அதிகரிக்கும் தொற்று; சிட்னியில் கடுமையான கட்டுப்பாடுகள்

1 mins read
cdd327e1-f520-4045-9550-d95f1eb59e6b
-

சிட்னி: தொடர்ந்து மூன்று வாரங்­க­ளாக கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரு­வ­தால் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சிட்­னி­யில் கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ளன.

புதிய கட்­டுப்­பா­டு­க­ளின்­படி கட்­டு­மான பணி­கள் நிறுத்­தப்­பட்­டுள்­ள­தோடு, அத்­தி­யா­வ­சி­ய­மற்ற சில்­லறை வர்த்­த­கங்­க­ளுக்­கும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால், சூப்பர் மார்க்கெட்டுகள், மருந்­த­கங்­க­ள் திறந்திருக்கும்.

மேலும் ஊழி­யர்­களை அலு­வ­ல­கத்­திற்கு வர கட்­டா­யப்­ப­டுத்­தும் நிறு­வ­னங்­க­ளுக்கு அப­ரா­தம் விதிக்­கப்­படும் என்­றும் எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தில் கிரு­மித்­தொற்று நில­வ­ரம் மிக­வும் மோச­மாக உள்ள மேற்கு பகு­தி­யில் மக்­கள் வேலைக்­காக வெளியே செல்ல தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

துப்­பு­ரவு, பரா­ம­ரிப்பு மற்­றும் வீட்டு சீர­மைப்பு உள்­ளிட்ட அனைத்து கட்­டட வேலை­களும் வரும் 30ஆம் தேதி வரை நிறுத்­தப்­படும் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

கிரேட்­டர் சிட்னி, அத­னைச் சுற்­றி­யுள்ள பகு­தி­களில் போலிஸ் கெடு­பிடி அதி­க­ரிக்­கும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில போலி­சார் கூறி­னர்.

நேற்­றைக்கு முந்­திய 24 மணி நேரத்­தில் அங்கு 111 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. அதற்கு முந்­தைய நாள் இது 97ஆக இருந்­தது. நியூ சவுத் வேல்­ஸில் நேற்று ஒரு­வர் தொற்­றால் மாண்­டு­விட்­டார்.

ஜூன் 26ஆம் தேதி முதல் சிட்­னி­யில் இருக்­கும் முடக்­க­நிலை வரும் 30ஆம் தேதி நடப்­பில் இருக்­கும்.