ஒலிம்பிக் கிராமத்தில் கிருமித்தொற்று
தோக்கியோ: ஒலிம்பிக் விளையாட்டாளர்கள் தங்கியிருக்கும் இடத்தில் ஒருவருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டு
உள்ளதாக தோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக நடத்தப்படும் சோதனையின் போது, ஒலிம்பிக் போட்டியை ஏற்பாடு செய்ய வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவரைப் பற்றிய வேறெந்த விவரங்களும் தெரி
விக்கப்படவில்லை. இந்த தொற்று சம்பவம், ஒலிம்பிக் போட்டிகள் பாதுகாப்பாக நடைபெறும் என்று ஜப்பான் அளித்த உறுதி குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
'கட்டுப்பாடுகள் தளர்த்தப்படக்கூடும்'
தைப்பே: தைவானில் இம்மாத பிற்பகுதியில் கட்டுப்பாடு
கள் தளர்த்தப்படக்கூடும் என்று மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் சூசகமாகச் சொன்னார். சனிக்கிழமையன்று அங்கு எட்டு பேர் தொற்றுக்கு ஆளாகினர். மே மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக ஆகக் குறைவான எண்ணிக்கை இது. கிருமிப் பரவல் குறையத் தொடங்கியுள்ளதால், கட்டுப்பாடு
களை நீட்டிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று சுகாதார அமைச்சர் சென் சொன்னார். ஆனால் இந்த எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவே இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் சொன்னார்.
இந்திய செய்தியாளர் உடலை தலிபான் படையினர் ஒப்படைத்தனர்
காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்படச் செய்தியாளர் தனிஷ் சித்திக்கின் (படம்) உடலை, தலிபான் படையினர் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்தனர். கந்தகாரில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த தனிஷ் சித்திக், உயரிய புலிட்சர் பரிசு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி போடாத வெளிநாட்டினருக்கு அனுமதி மறுக்கும் பிரான்ஸ்
பாரிஸ்: பிரான்சில் கிருமிப் பரவல் மீண்டும் அதிகரித்து
உள்ளதைத் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்க அந்நாடு முடிவு செய்துள்ளது. இன்று முதல் பிரிட்டன், ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து செல்லும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகள் தொற்று இல்லை என்பதற்கான பரிசோதனை சான்று அளிக்க வேண்டியது அவசியம். பிரான்சிலிருந்து செல்பவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தாலும் தனிமைப்படுத்தப்படு வார்கள் என்று பிரிட்டன் அறிவித்த பிறகு, பிரான்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

