லண்டன்: பிரிட்டனில் இன்று முதல் கிட்டத்தட்ட அனைத்து கட்டுப்
பாடுகளும் தளர்த்தப்படவுள்ள நிலையில், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனும் அமைச்சர் ஒருவரும் தொற்றுக்கு ஆளான ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தேசிய சுகாதார சேவை தெரிவித்தது. மேலும் ஓர் அமைச்சருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்டா வகை கிருமித்தொற்றால் பிரிட்டனில் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அங்கு கடந்த சில நாட்களாக, நாளொன்றுக்கு 50,000க்கும் அதிகமாக தொற்று சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
அதோடு பல்லாயிரக்கணக்
கானோர் 10 நாட்களுக்குச் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் ஜான்சனும் நிதிஅமைச்சர் ரிஷி சுனக்கும் சுய தனிமைப்
படுத்தல் விதிக்கு உட்படாமல் அலுவலகத்தில் இருந்து வேலை செய்வார்கள் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் சோதனை திட்டம் ஒன்றின் கீழ், இவர்களுக்கு அன்றாட கிருமித்தொற்று பரி
சோதனை நடத்தப்படும் என்று பிரதமர் அலுவலகம் கூறியிருந்தது.
ஆனால் இந்த விதிவிலக்கிற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, அடுத்த மூன்று மணி நேரத்தில் அந்த முடிவு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டு, அவர்கள் சுயமாக தனிமைப்
படுத்திக்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, இரண்டு தவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்ட சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித்திற்கு சனிக்கிழமையன்று தொற்று உறுதி செய்யப்பட்டது.
குடும்பத்தோடு சுயமாக
தனிமைப்படுத்திக்கொண்டுள்ள அவர், தனக்கு லேசான அறிகுறிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து சுகாதார நிபுணர்கள் எச்சரித்திருந்த போதிலும், தடுப்பூசி போட்டுக்கொண்டதால் பாதிப்பு, பலி எண்ணிக்கை இரண்டும் குறைந்துள்ளதாக பிரிட்டிஷ் பிரதமர் ஜான்சனும் அவரது அமைச்சர்களும் கூறி வருகின்றனர்.
பெரியோர் எண்ணிக்கையில் அங்கு இதுவரை 87.8 விழுக்காட்டினருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அதோடு மூன்றில் இரண்டு பங்கு பெரியவர்களுக்குத் தடுப்பூசி போடும் இலக்கையும் பிரிட்டிஷ் அரசாங்கம் அடைந்து
உள்ளது.

