மலேசியா: செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு

மலேசியா: செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு

1 mins read
26f33005-90de-4069-8a2d-d3ed8c176ef1
-

புத்ரா ஜெயா: வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மலேசியாவில் பள்ளிகள் படிப்படியாகத் திறக்கப் படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஆனால், கிருமித்தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சு வழங்கும் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றங்கள் இருக்கக்கூடும் என்றும் அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே அனைத்து வகுப்புகளும் தொடர்ந்து இணையம் வழி நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கப்படும் விவ

ரம் குறித்து திறக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தெரி

விக்கப்படும் என்றது அமைச்சு.

தடுப்பூசி போடப்படும் தற் போதைய நிலவரத்தை அடிப்படை

யாகக் கொண்டு பள்ளிகளைத் திறப்பது குறித்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.