வியட்னாம்: ஒன்றுகூடுவதற்கு தடை
ஹனோய்: வியட்னாமில் மெக்கோங் டெல்டா, ஹோ சீ மின் நகரங்கள் உட்பட தென் பகுதி முழுவதும் இரண்டு வார முடக்கநிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து மூன்றாவது நாளாக 3,000த்திற்கும் அதிகமான தொற்று சம்பவங்கள் பதிவானது. அரசாங்க அலுவலகங் கள், மருத்துவமனைகள், ஒரு சில அத்தியாவசிய சேவை கள் தவிர பொது இடங்களில் இரண்டுக்கும் மேற்பட்ட வர்கள்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு, மருந்து, அல்லது அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர்.
நீர் பூங்காவில் விளையாடிய
26 பேருக்குச் சுவாச பிரச்சினை
ஹூஸ்டன்: டெக்சஸ் ஸ்பிரிங் நகரில் உள்ள நீர் பூங்கா
வில் விளையாடிக் கொண்டிருந்தபோது ப்ளீச், சல்பூரிக் அமிலத்தால் சுவாச பிரச்சினை, தோல் எரிச்சலுக்கு ஆளான 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிகாரிகள் தண்ணீரைச் சோதனையிட்ட போது, அதன் பிஹெச் அளவு அனுமதிக்கப்பட்ட அளவில் இருந்த
தாக கூறப்படுவதால், மக்கள் பாதிக்கப்பட்டதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
ஒலிம்பிக்: இருவருக்குத் தொற்று
தோக்கியோ: தோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் புதிதாக இரண்டு விளையாட்டு வீரர்களுக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான வீரர்கள் தங்கும் ஒலிம்பிக் கிராமத்தில் இதுவரை மூவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட மூவரும் ஒரே நாடு, விளையாட்டைச் சேர்ந்தவர்கள் என்று ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் பேச்சாளர் சொன்னார்.
அக்டோபரில் அனைவருக்கும் தடுப்பூசி: மலேசியா புதிய இலக்கு
கோலாலம்பூர்: புதிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் மலேசியாவில் பெரியவர்கள் அனைவருக்கும் வரும் அக்டோபர் மாதத்திற்குள் முழுமையாகத் தடுப்பூசி போடும் புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார். இதன்படி தடுப்பூசி போடும் விகிதம் நாளொன்றுக்கு 500,000மாக அதிகரிக்கப் படும். முன்பு, 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் 80 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

