பேங்காக்: தாய்லாந்தில் மேலும் மூன்று மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பேங்காக் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் ஏற்கெனவே சென்ற திங்கட்கிழமை முதல் கடுமையான கட்டுப்பாடுகள் நடப்பில் உள்ளன.
தாய்லாந்தில் முழு முடக்கநிலை இல்லை என்றாலும் தொற்று பரவும் அதிக அபாயமுள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன.
இருப்பினும் சென்ற மூன்று நாட்களாக தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அங்கு புதிய உச்சத்தை அடைந்து வரும் நிலையில் மேலும் சில மாநிலங்களில் கட்டுப்
பாடுகள் கடுமையாக்கப்பட்டு
உள்ளன.
அல்ஃபா மற்றும் டெல்டா வகை தொற்றால் கிருமிப் பரவல் தீவிர
மடைந்து உள்ளதால் நேற்று புதிதாக 11,397 பேர் பாதிக்கப்பட்டனர். 101 பேர் மாண்டுவிட்டனர்.
இதையடுத்து, சோன்பூரி, அயோத்தயா மற்றும் சச்சோங்சாவ் மாநிலங்களில், நாளை முதல் கடைத் தொகுதிகள் மூடப்படும். இரவு 9 மணி முதல் 4 மணி வரை ஊரடங்கு நடப்பில் இருக்கும் என்று அரசாங்க அறிக்கை தெரிவித்தது.
கிருமிப் பரவல் மோசமடைந்துள்ளதால், தாய்லாந்தின் சுகாதார அமைப்பு திணறக்கூடிய நிலையில் உள்ளது.
ஆனால் இந்த நிலைமை மேலும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்து
உள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் பிரயுத் சான் ஓசா பதவி விலகக் கோரி தாய்லாந்து இளம் ஆர்வலர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது இடங்களில் ஒன்று
கூடுவதற்கு நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள தடையை அவர்கள் பொருட்படுத்தவில்லை.
பெருகி வரும் கிருமித்தொற்றும் அதன் காரணமாக நீண்ட காலமாக முடங்கியிருக்கும் பொருளாதாரம் ஆகியவற்றால் அவர்கள் விரக்தி அடைந்துள்ளதே போராட்டத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

