ஆஸ்திரேலியாவில் சற்றே குறைந்த கிருமித்தொற்று

ஆஸ்திரேலியாவில் சற்றே குறைந்த கிருமித்தொற்று

1 mins read
bc814909-39ba-4682-a5a1-bd0c253215cd
-

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் தொற்று சம்­ப­வங்­கள் நேற்று சற்றே குறை­வாக பதி­வா­னது.

சிட்­னி­யைத் தலை­ந­க­ர­மாகக் கொண்ட நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தில் நேற்று 105 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­னர். 111 என்ற முந்­திய நாள் எண்­ணிக்­கை­யை­விட இது சற்றே குறைவு.

இவர்­களில் 27 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­யி­ருந்த சம­யத்­தில், சமூக நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்­த­னர்.

"கிட்­டத்­தட்ட ஒரு மாத­கா­ல­மாக முடக்­க­நிலை இருந்­தா­லும் தொற்று சம்­ப­வங்­கள் பெருமள­வில் குறை­ய­வில்லை.

"தொற்­றுக்கு ஆளா­வோ­ரில் பெரும்­பா­லா­னோர் சமூக நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளாக இருப்­பது கவ­லை­ய­ளிப்­ப­தாக உள்­ளது," என்­றார் அம்மாநில முதல்­வ­ர்.

கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருக்­கும் ஜூலை 30க்குள், தொற்று இல்­லாத நிலையை அடை­வ­தற்­கான வாய்ப்­பு­கள் தென்­ப­ட­வில்லை என்­றும் அவர் சொன்­னார்.

எனவே கட்­டுப்­பா­டு­கள் மேலும் கடு­மை­யாக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பை­யும் அவர் நிரா­க­ரிக்­க­

வில்லை.

அது­போல் அதன் அண்­டை­

மா­நி­ல­மான விக்­டோ­ரி­யா­வில் நேற்று 16 தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின. முந்­தைய நாள் அது 19ஆக இருந்­தது.