ஹஜ்ஜு பெருநாள் தொடர்பில் மலேசியாவில் தீவிர சோதனை

ஹஜ்ஜு பெருநாள் தொடர்பில் மலேசியாவில் தீவிர சோதனை

1 mins read
3ad0ce45-863e-47fa-a269-4658c26917f0
-

ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு மலேசிய அதிகாரிகள் தங்கள் சோதனை நடவடிக்கைகளை முடுக்கிவிட உள்ளனர். நோன்புப் பெருநாளில் ஏற்பட்டது போல கொவிட்-19 கிருமித்தொற்றுக் குழுமங்கள் அளவுக்கு அதிகமாக பெருகாமல் இருப்பதைத் தடுப்பது இதன் நோக்கமாகும். அங்குள்ள தினசரி கிருமிச்சம்பவ எண்ணிக்கை சராசரியாக 10,000க்கு மேல் உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கையில் போலிசார் சாலைத் தடுப்புகளில் கடுமையான சோதனைகளைச் செய்து வருகின்றனர். சட்டவிரோதமாக பிற மாநிலங்களுக்குச் செல்ல முயன்ற 4, 839 வாகனங்கள் திரும்ப அனுப்பப்பட்டதாக துணைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

ஹஜ்ஜு பெருநாளுக்கான குர்பான் சடங்கு, இஸ்லாமிய வழிபாட்டு இடங்களிலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த அனுமதி பெற்ற இடங்களிலும் மட்டுமே அனுமதிக்கப்படும். சடங்குகளுக்குப் பின்னர் நடைபெறக்கூடியவிருந்துகளுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளன.