மியன்மார்: உடலை அடக்கம் செய்யும் பணியில் தொண்டூழியர்கள்

மியன்மார்: உடலை அடக்கம் செய்யும் பணியில் தொண்டூழியர்கள்

1 mins read
8497d78e-373a-4b80-8875-ad1901893c3c
மியன்மாரின் யங்கூனில் மரணமடைந்த தொற்று நோயாளிகளின் உடல்களை வீடுவீடாகச் சென்று தூக்கி வந்து அடக்கம் செய்யும் தொண்டூழியர்கள். படம்: ஏஎஃப்பி -

யங்­கூன்: ராணுவ ஆட்­சிக்­கு­ழு­வி­ன­ரின் கட்­டுப்­பாட்­டில் இயங்­கும் மியன்­மா­ரில் கொவிட்-19 நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கிறது.

அந்­நோ­யா­ளி­க­ளுக்­குச் சிகிச்­சை­ய­ளிக்க மருத்­து­வ­ம­னை­களில் ஊழி­யர்­கள் இல்லை. மருத்­து­வ­ம­னை­கள் யாவும் செய­லி­ழந்­த­நி­லை­யில் காணப்­ப­டு­கின்­றன.

எனவே, தொற்­றால் பாதிக்­கப்­பட்டு சிகிச்­சை­யின்றி வீடு­களில் மர­ண­ம­டை­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது.

இவ்­வாறு தொற்­றுப் பாதிப்­பால் மாண்­ட­வர்­க­ளின் உடல்­களை எரி­யூட்­டு­வ­தற்கு தொண்­டு­ழி­யர்­கள் வீடு வீடா­கச் சென்று உடல்­க­ளைப் பெற்­று­வ­ரு­கின்­றனர்.

தொண்­டூ­ழி­யர்­களில் ஒரு­வ­ரான குமாரி தான் தான் சோ, "ஒவ்­வொரு நாளும் அதி­கா­லை­யி­லேயே எனக்கு அழைப்பு வந்­து­வி­டும். தொற்­றுப் பாதிப்­பால் மாண்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் அழைப்­பார்­கள். அவர்­க­ளி­டம் மாண்­ட­வர்­க­ளின் விவ­ரத்­தைக் கேட்டு எழு­திக்­கொண்டு அவ்­வி­டத்­திற்கு எங்­கள் குழுவை அனுப்­பி­வைப்­பேன்.

"இந்­தச் சேவையை நாங்­கள் ஓய்­வின்றி செய்­து­வ­ரு­கி­றோம். ஒவ்­வொரு நாளும் எங்­கள் குழு 30 முதல் 40 உடல்­க­ளைப் பெற்று வரு­கி­றது. இங்கு இயங்­கும் மற்ற தொண்­டூ­ழி­யக் குழுக்­களும் எங்­க­ளைப்­போ­லவே சேவை­யாற்றி வரு­கின்­ற­னர். சில சம­யங்­களில் ஒரே வீட்­டில் இருந்து இரண்டு உடல்­க­ளைப் பெறும் துய­ரச் சம்­ப­வங்­களும் நடப்­ப­துண்டு," என்று ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னத்­தி­டம் தெரி­வித்­தார்.