மலேசிய துணைப் பிரதமர்: 'முழுமையாக தடுப்பூசி போட்டவர்களுக்கு தளர்வுகள்'

மலேசிய துணைப் பிரதமர்: 'முழுமையாக தடுப்பூசி போட்டவர்களுக்கு தளர்வுகள்'

2 mins read
96ee85b8-e348-4a7a-8c4c-cf7912a53fa4
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் பெரு­நா­ளுக்­குப் பிறகு, மேலும் தளர்­வு­கள் அறி­விக்­கப்­ப­ட­லாம் என்று அந்­நாட்­டின் துணைப் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் நேற்­றுத் தெரி­வித்­தார். அதன்­படி முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்கு என்­னென்ன விலக்­கு­கள் அளிக்­கப்­படும் என்­பது அப்­போது அறி­விக்­கப்­படும் என்­றார் திரு இஸ்­மா­யில்.

செய்­தி­யா­ளர்­க­ளி­டம் நேற்­றுக் காலை பேசிய துணைப்­பி­ர­த­மர் இஸ்­மா­யில், தடுப்­பூசி விநி­யோ­கப் பணி நல்ல முறை­யில் செயல்­ப­டு­வதை உறுதி செய்­வ­தற்­கான சிறப்­புக்­குழு, தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்கு கட்­டுப்­பா­டு­களில் என்­னென்ன விலக்­கு­கள் அளிப்­பது என்­பது குறித்து விரி­வான ஆய்வை மேற்­கொண்­டுள்­ளது.

விரை­வில் அந்த ஆய்­வின் முடி­வு­களை அவர்­கள் விரை­வில் அமைச்­ச­ர­வை­யி­டம் சமர்ப்­பிப்­பர் என்று திரு இஸ்­மா­யில் கூறி­னார்.

சிறப்­புக் குழு­வின் ஆய்வு முடி­வு­க­ளுக்­குப் பின், முன்­ன­தாக பிர­த­மர் அறி­வித்­தி­ருந்­த­படி, இரண்டு முறை தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்கு கட்­டுப்­பா­டு­களில் இருந்து சில விலக்­கு­கள் அளிக்­கப்­படும்," என துணைப் பிர­த­மர் கூறி­னார்.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­வர்­கள் எந்த நிலை­யி­லான பய­ணங்­களை மேற்­கொள்ள முடி­யும் என்­ப­தும் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஊழி­யர் அணி­யைக் கொண்ட துறை­களில் எந்­தெந்த துறைகளுக்குத் தளர்­வு­க­ளு­டன் செயல்­பட அனு­மதி அளிக்­கப்­ப­ட­லாம் என்­பன போன்­றவை இந்த ஆய்­வில் விரி­வாக அலசி ஆரா­யப்­படும் என்று துணைப்­பி­ர­த­மர் இஸ்­மா­யில் கூறி­னார்.

முன்­ன­தாக நேற்று, பிர­த­மர் முகை­தீன் யாசின், வரும் அக்­டோ­பர் மாதத்­திற்­குள் நாட்­டின் ஒட்­டு­மொத்த மக்­க­ளுக்­கும் தடுப்­பூசி போடு­வதே அர­சாங்­கத்­தின் இலக்கு.

தேசிய கொவிட்-19 தடுப்­பூ­சித் திட்­டத்­தின்­கீழ், தடுப்­பூ­சித் திறனை நாளொன்­றுக்கு 500,000 ஆக அதி­க­ரிப்­ப­தன் மூலம் இந்த இலக்கை நாம் எட்­ட­லாம் என்று பிர­த­மர் முகை­தீன் தெரி­வித்­தார். முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக் கொண்ட ஊழி­யர்­க­ளைக் கொண்ட துறை­கள் சில கட்­டுப்­பாட்­டுத் தளர்­வு­களுடன் செயல்­பட அனு­மதி அளிக்க அர­சாங்­கம் திட்­ட­மிட்­டுள்­ள­தாக கடந்த வாரம் பிர­த­மர் அறி­வித்­தி­ருந்­தார்.

நேற்­றைய நில­வ­ரப்­படி, மலே­சி­யா­வில் 9.5 மில்­லி­யன் பேர், தங்­கள் முதல் தடுப்­பூ­சி­யை­யும் 4.4 மில்­லி­யன் பேர் முழு­மை­யான தடுப்­பூ­சி­யை­யும் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், நேற்­றைய நில­வ­ரப்­படி நாட்­டில் இது­வரை 14,347,285 தடுப்­பூசி மருந்­து­கள் போடப்­பட்­டுள்­ள­தாக மலே­சிய சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் டாக்­டர் ஆதம் பாபா தனது டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார்.

அதன்­படி 4,531,550 பேருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. நாட்­டின் 13.9 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­க­வும், மேலும், 9,815,735 பேர் முதல் தடுப்­பூ­சி­யை­யும் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர் என்று அவர் கூறி­னார். அதி­க­மா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட மாநி­லங்­களில், லபு­வான் முன்­ன­ணி­யில் உள்­ளது. இங்கு 62 விழுக்­காட்­டி­னர் முழு­யை­மா­கத் தடுப்­பூசி போட்­டுள்­ள­னர். அதற்­க­டுத்த நிலை­யில் சர­வாக் மாநி­லத்­தில் 43.8 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுள்­ள­னர் என பெர்­னாமா செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது.