விக்டோரியா மாநிலத்தில் முடக்கநிலை நீட்டிப்பு

விக்டோரியா மாநிலத்தில் முடக்கநிலை நீட்டிப்பு

1 mins read
ea4132bd-2df0-4719-ad05-a38028e422d6
-

சிட்னி: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முடக்கநிலை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இங்கு புதிய தொற்று எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருந்தாலும் அதிவிரைவில் பரவக்கூடிய டெல்டா வகை கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அங்கு முடக்கநிலை நீட்டிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

சமூகத்தில் தொற்று இன்னும் கண்டறியப்பட்டு வருவதால் கொவிட்-19 கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏதும் இல்லை. மேலும் அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அம்மாநிலத்தின் முதல் அமைச்சர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார். முன்னதாக இங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலை இன்றோடு முடிவடைகிறது.