கார் பந்தய வீரர் ஹேமில்டன் மீது இனவாதத் தாக்குதல்

கார் பந்தய வீரர் ஹேமில்டன் மீது இனவாதத் தாக்குதல்

2 mins read
a7ec75ec-f21e-4932-bfd5-be770b13afb9
-

இங்­கி­லாந்து: பிரிட்­டிஷ் எஃப்1 விரைவு கார் பந்­தய விருதை சாதனை அள­வாக எட்­டா­வது முறை­யா­கக் கைப்­பற்­றிய 36 வயது பிரிட்­ட­னின் லுயிஸ் ஹேமில்­டன், இணை­யத்­தில் இன­வா­தத் தாக்கு­த­லுக்கு ஆளா­னார்.

ஒட்­டு­மொத்­த­மாக எஃப்1 விருதை ஏழு முறை­ வென்­றுள்ள ஹெமில்­டன், நேற்று முன்­தி­னம் இங்­கி­லாந்­தின் சில்­வர்ஸ்­டோன் நக­ரில் நடை­பெற்ற பந்­த­யத்­தின் முதல் சுற்­றி­லேயே புள்ளிப் பட்­டி­ய­லில் தற்­போது முத­லி­டத்­தில் உள்ள நெதர்­லாந்­தின் மெக்ஸ் வெஸ்­டப்­ப­னின் கார், ஹேமில்­ட­னின் காரு­டன் மோதி, பந்­த­யத்­தி­லி­ருந்து வில­கி­யது. அந்த மோத­லில் காய­முற்ற வெஸ்­டப்­பன், மருத்­து­வ­மனை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

தொடக்­கக் கோட்­டில் இரண்­டா­வது நிலை­யில் போட்­டி­யைத் தொடங்­கிய ஹேமில்­டன் முதல் நிலை­யில் தொடங்­கிய வெஸ்­டப்­ப­னின் காரை முந்­த பல முறை முயன்­றார்.

அதில் வெஸ்­டப்­ப­ன், ஹேமில்­டன் காரின் முன் சக்­க­ரத்தை மோதி, தடம் மாறி, பாது­காப்பு சுவர்­கள் மீது மோதி­னார். அதன் கார­ண­மாக பந்­த­யம் சிறிது நேரம் நிறுத்­தப்­பட்டு, ஹேமில்­ட­னுக்கு கூடு­தல் பத்து வினாடி தண்­டனை கொடுக்­கப்­பட்­டது.

அப்­படி இருந்­தும் பந்­தயத்­தின் முதல் நிலை­யில் இருந்த மொனாக்­கோ­வின் சார்ல்ஸ் லெக்­ரெக்கை முந்­திச் சென்று பந்­த­யத்தை முடித்து வெற்­றி­யா­ள­ரா­னார்.

"ஹேமில்­டன் ஒரு போட்­டி­யா­ளரை மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைத்­துள்­ளார். இது குறுக்கு வழி­யில் பெற்ற வெற்றி," என்று வெஸ்ட்­டப்­ப­ன் ஓட்­டிய ரெட் புல் பந்­தய நிறு­வ­னத்­தின் தலை­வர் கிறிஸ்­டி­யன் ஹோர்­னர் சாடி­னார்.

பந்­த­யம் முடிந்து சில மணி நேரத்­தில் இணை­யத்­தில் ஹேமில்­ட­னுக்கு எதி­ராக இன­வா­தத் தாக்­கு­தல் தொடர்­பில் கருத்­து­கள் வலம் வந்­தன.

இது குறித்து பேசிய ஃபேஸ்புக்­கின் பேச்­சா­ளர், "ஹேமில்­ட­னுக்கு எதி­ரான இன­வா­தத் கருத்­து­கள் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தவை. அந்தக் ­கருத்­து­களை நாங்­கள் ஃபேஸ்புக்­கி­லி­ருந்­தும் இன்ஸ்­ட­ கிரா­மி­லி­ருந்­தும் அகற்றி விட்டோம்," என்றார்.