அமெரிக்கர்களை தடுப்பூசி போடும்படி அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். தடுப்பூசிகளைப் போடாததன் காரணமாக அமெரிக்க பங்குச் சந்தை பெரும் சரிவு கண்டதை அடுத்து அவரது கருத்துகள் வெளிவந்துள்ளன.
அண்மையில் சில வாரங்களாக அமெரிக்காவில் கொவிட்-19 சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. உருமாறிய டெல்ட்டா கிருமியே தற்போது அந்நாட்டில் தடுப்பூசி போடாதவருக்கு இடையே பரவி வருகிறது. தற்போது இந்நோயால் உயிரிழப்போரில் அதிகமானோர் தடுப்பூசி போடாதவர்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் பொருளியல் மீட்சி, கிருமிப்பரவலைக் கட்டுக்குள் வைத்திருப்பதை நம்பியுள்ளதாக பொருளியலைப் பற்றிய தமது உரையில் கூறியுள்ள திரு பைடன், அமெரிக்காவில் நான்கு மாநிலங்களின் கிருமித்தொற்று எண்ணிக்கை, கடந்த வாரத்தின் கிருமிச்சம்பவங்களில் கிட்டத்தட்ட 40 விழுக்காடு என்று கூறினார்.
"எனவே தயவுசெய்து, தயவுசெய்து தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள்," என்று திரு பைடன் கூறினார்.

