கிருமிப் பரவலை கட்டுக்குள் கொண்டுவர திணறும் இந்தோனீசியா

கிருமிப் பரவலை கட்டுக்குள் கொண்டுவர திணறும் இந்தோனீசியா

2 mins read
1ecc04d8-00d5-498a-9a6e-aa9397ff23f1
மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் இந்தோனீசியா முழுவதும் சோதனைச்சாவடி களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு உள்ளன. சுரமடு பாலத்தில் உள்ள சோதனைச்சாவடி ஒன்றில் வாகனமோட்டியிடம் விசாரிக்கும் போலிசார். படம்: ஏஎஃப்பி -

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் கிரு­மித்­தொற்று கார­ண­மாக ஏற்­படும் உயி­ரி­ழப்பு அதி­க­ரித்து வரு­வ­தால், பெரு­ம­ள­வில் மக்­கள் கூடு­வ­தைத் தடுக்க முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் நிலை­யில், ஹஜ்­ஜுப் பெரு­நா­ளைக் கொண்­டாட பெரு­ம­ள­வில் ஒன்­று­கூ­டிய இந்­தோ­னீ­சிய மக்­கள் பள்­ளி­வா­சல்

களுக்கு வெளியே தொழு­கை­யில் ஈடு­பட்­ட­னர்.

பாரம்­ப­ரிய நிகழ்­வு­கள் உட்­பட பெரி­ய­ள­வில் கூடு­வ­தற்­குத் தடை விதித்­துள்ள அதி­கா­ரி­கள், சமய வழி­பாட்­டுச் செயல்­க­ளுக்­கா­க­வும் ஒன்­று­கூட வேண்­டாம் என மக்­க­ளி­டம் வலி­யு­றுத்­தி­னர்.

மற்­ற­வர், சமூக நல­னுக்கு முன்­னுரிமை கொடுக்க வலி­யு­றுத்­திய இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோடோ, வீட்­டி­லேயே தொழு­கை­யில் ஈடு­ப­டு­மாறு தன் நாட்டு மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார்.

தலை­ந­கர் ஜகார்த்­தா­வி­லும் வேறு சில இடங்­க­ளி­லும் இந்த வேண்­டு­கோ­ளுக்­குச் செவி­சாய்த்த சிலர், அரு­கி­லுள்ள சாலை­களில் தொழு­கைக்­காக ஒன்­று­கூ­டி­னர்.

ஆனால் பண்­டார் அச்­சே­யில்

பைதுர்­ரஹ்­மான் கிராண்ட் பள்ளிவாச­லுக்கு வெளியே குறு­கிய இடத்­தில் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் ஒன்­று­கூ­டி­னர்.

சென்ற மே மாதம் கொண்­டா­டப்­பட்ட நோன்புப் பெரு­நா­ளின்­போது இந்­தோ­னீ­சி­யர்­கள் தங்­கள் சொந்த ஊர்­க­ளுக்­குச் சென்று திரும்­பி­ய­தைத்­தொ­டர்ந்து, அங்கு கிரு­மிப் பர­வல் பெரு­ம­ளவு அதி­க­ரித்­தது.

தற்­போது இந்­தோ­னீ­சி­யா­வில் நாளொன்­றுக்கு 50,000த்திற்­கும் அதி­க­மான தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின்­றன. ஜூன் மாத தொடக்­கத்­தில் இருந்­த­தை­விட இது 10 மடங்கு அதி­கம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இத­னால் நோயா­ளி­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்க முடி­யா­மல் பல மருத்­து­வ­ம­னை­கள் அவர்­க­ளைத் திருப்பி அனுப்ப வேண்­டிய சூழ்­நிலை நில­வு­கிறது.

மேலும் இரவு முழு­வ­தும் வேலை செய்­தா­லும் கல்­ல­றை­களில் குவி­யும் சட­லங்­க­ளைக் கையாள முடி­யா­மல் பணி­யா­ளர்­கள் திண­று­வ­தால், தொண்­டூ­ழி­யர்­களும் அப்­ப­ணி­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.