ஒரே நாளில் 4 லட்சம் மக்களுக்குத் தடுப்பூசி

ஒரே நாளில் 4 லட்சம் மக்களுக்குத் தடுப்பூசி

2 mins read
7d3cbaf4-0fe7-45a6-b577-baa03d2e8020
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் ஒரே நாளில் 4 லட்­சத்­திற்­கும் அதி­க­மா­னோ­ருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

திங்­கட்­கி­ழ­மை­யன்று 424,936 பேருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­ட­தா­க­வும் அவர்­களில் 282,106 பேர் முதல் முறை­யா­க­வும் 142,830 பேர் இரண்­டா­வது முறை­யா­க­வும் தடுப்­பூ­சிப் போட்­டுக் கொண்­டார்­கள் என்று தடுப்­பூ­சிக்­கான சிறப்­புக் குழு தெரி­வித்­தது.

வரும் அக்­டோ­பர் மாதத்­திற்­குள் அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி போடு­வ­தற்கு இலக்கு நிர்­ண­யித்­துள்ள மலே­சியா, தடுப்­பூசி விகி­தத்தை நாளொன்­றுக்கு அரை மில்­லி­ய­னாக அதி­க­ரிப்­பதை நோக்­க­மாகக்

கொண்­டுள்­ளது.

இது­வரை 10.09 மில்­லி­யன் பேர் முதல் முறை­யும் 4.64 மில்­லி­யன் மக்­கள் முழு­மை­யாக தடுப்­பூ­சிப் போட்­டுக்­கொண்­டுள்­ள­தாகவும் சிறப்­புக் குழு­வின் டுவிட்­டர் பதி­வில் கூறப்­பட்­டுள்­ளது.

பெரி­ய­வர்­கள் மக்­கட்­தொ­கை­யில் 30.9 விழுக்­காட்­டி­னர் முதல் முறை­யும் 14.3 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­க­வும் தடுப்­பூசி போட்­டுக் கொண்­டுள்­ள­னர்.

மலே­சி­யா­வி­லேயே லபூ­வா­னில் அதி­க­மா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர். அதன் மக்­கட்­தொ­கை­யில் 60 விழுக்­காட்­டி­னர் முதல் முறை­யும் 44.4 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­க­வும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

இதற்­கி­டையே, மருத்­துவ தர­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் ஃபைசர், சினோ­வேக் ஆகிய இரண்டு தடுப்­பூ­சி­களும் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ராக ஒரே மாதி­ரி­யான செயல்­தி­றன் கொண்­டவை என்று கூறி­யுள்­ளார் சுகா­தார இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா.

சிலி­யில் சினோ­வேக் தடுப்­பூசி போடப்­பட்ட 4.2 மில்­லி­யன் பேரி­ட­மும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத 5.5 மில்­லி­யன் பேரி­ட­மும் நடத்­தப்­பட்ட ஆய்வு தர­வு­கள் இவ்­வாறு கூறு­வ­தாக அவர் சொன்­னார்.

ஃபைசர் 95% திறன்­மிக்­கது என்று கூறப்­ப­டு­வது சிறிய குழு­வான 170 பேரி­டம் நடத்­தப்­பட்ட ஆய்வு தர­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் கூறப்­ப­டு­கிறது என்­றும் அவர் சொன்­னார்.

மலேசியாவில் நேற்று 12,366 பேர் தொற்றுக்கு ஆளாகினர்.

தடுப்பூசி போடும் பணியை முடுக்கிவிட்டுள்ள மலேசியா