தனிமைப்படுத்தல் மையத்தில் தப்ப முயன்ற ஆடவர்

தனிமைப்படுத்தல் மையத்தில் தப்ப முயன்ற ஆடவர்

1 mins read
9f93c837-844c-4c9a-b298-2c7defaa97ca
-

சிட்னி: ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரின் தனிமைப்படுத் தல் மையத்தின் 4வது மாடியில் இருந்து ஆடவர் ஒருவர் தப்ப முயன்றதாக நேற்று போலிசார் தெரிவித்தனர்.

பிரிஸ்பனில் இருந்து உள்நாட்டு விமானப் போக்குவரத்து மூலம் பெர்த் சென்ற அவருக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் அவர் பெர்த்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று கூறிய அதிகாரிகள் அவரைத் தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைத்தனர்.

ஆனால் அந்த அறையில் இருந்த படுக்கை விரிப்புகளை ஒன்றாக சேர்த்து கயிறு போல் மாற்றி, நள்ளிரவு ஒரு மணியள

வில் அவர் தப்பித்ததாக மேற்கு ஆஸ்திரேலிய போலிசார் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு இருந் தனர்.

ஆனால், அடுத்த எட்டு மணி நேரத்தில் அவரைக் கைது செய்த போலிசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.