உயிரிழப்புகளுக்கு அரசாங்கமே காரணம்: ஆலோசகர் சாடல்

லண்­டன்: வய­தில் மூத்­த­வர்­க­ளைக் காப்­பாற்­றும் வகை­யில் முடக்­க­

நி­லை­யைக் கொண்டு வர பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் தயா­ராக இருக்­க­வில்லை என்று முன்­னாள் மூத்த ஆலோ­ச­கர் ஒரு­வர் கூறி­யுள்­ள­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி கூறு­கிறது.

வேலையை விட்டு வில­கிய ஓராண்­டிற்­குப் பிறகு தொலைக்­காட்சி ஒன்­றிற்கு அளித்த முதல் பேட்­டி­யின் சில பகு­தி­களில் முன்­னாள் அர­சி­யல் ஆலோ­ச­க­ரான டோமி­னிக் கம்­மிங்ஸ் இவ்­வாறு கூறியிருக்கிறார்.

பெரும்­பா­லும் 80 வய­திற்கு மேற்­பட்­ட­வர்­களே இறப்­ப­தால், சென்ற ஆண்டு இரண்­டா­வது முறை­யாக முடக்­க­நிலை உத்­த­ர­வைப் பிறப்­பிக்க ஜான்­சன் தயா­ராக இல்லை என்று கம்­மிங்ஸ் கூறி­யி­ருந்­தார்.

மேலும் கொரோனா தொற்று பர­வத் தொடங்­கிய காலக்­கட்­டத்­தில் 95 வய­தான இங்­கி­லாந்து ராணி எலி­ச­பெத்­தை­யும் ஜான்­சன் சந்­திக்க விரும்­பி­ய­தா­க­வும் அவர் சொன்­னார்.

அத்­தி­யா­வ­சி­ய­மற்ற, குறிப்­பாக மூத்­த­வர்­க­ளைச் சந்­திப்­ப­தைத் தவிர்க்­கு­மாறு அப்­போது அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

தவிர்த்­தி­ருக்­கக்­கூ­டிய ஆயி­ரக்­

க­ணக்­கான கொவிட்-19 உயி­ரி­ழப்பு

­க­ளுக்கு அர­சாங்­கமே கார­ணம் என்­றும் அவர் குற்­றம் சாட்­டு­கி­றார்.

ஆனால் இவற்­றின் உண்­மைத் தன்­மையை ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தால் சரி­பார்க்க முடி­ய­வில்லை.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!