இவ்வாண்டு இறுதிக்குள் பாதி பேருக்கு தடுப்பூசி போட மியன்மார் இலக்கு

இவ்வாண்டு இறுதிக்குள் பாதி பேருக்கு தடுப்பூசி போட மியன்மார் இலக்கு

2 mins read
8e343ee0-4e5b-4d72-b769-d74567235f8c
-

யங்­கூன்: ராணுவ ஆட்சி நடை­பெ­றும் மியன்­மா­ரில் இவ்­வாண்டு இறு­திக்­குள் அதன் மக்­கட்­தொ­கை­யில் பாதிக்­கும் மேற்­பட்­டோ­ருக்கு தடுப்­பூசி போட அதன் சுகா­தார அமைச்சு இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் அங்கு கிரு­மித்­தொற்­றால் மாண்­டோர் எண்­ணிக்கை ஆக அதி­க­மாக பதி­வா­ன­தைத் தொடர்ந்து, சுகா­தார அமைச்சு இத­னைத் தெரி­வித்­துள்­ளது.

சுமார் 54 மில்­லி­யன் மக்­கட்­தொகை கொண்ட மியன்­மா­ரில், இது­வரை வெறும் 1.6 மில்­லி­யன் பேருக்கு மட்­டுமே தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தாக உள்­ளூர் ஊட­க­மான குளோ­பல் நியூ லைட் கூறு­கிறது.

ஆனால் அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி போடப்­ப­டு­வதை உறுதி செய்­யும் வகை­யில் தடுப்­பூ­சி­கள் தொடர்ந்து இறக்­கு­மதி செய்­யப்­

ப­டு­வ­தா­க­வும் அது கூறு­கிறது.

சுமார் 750,000 சீன தடுப்­பூ­சி­கள் நாளை மியன்­மார் சென்று சேரும் என்­றும் அடுத்த இரண்டு நாட்­களில் மேலும் அதிக தடுப்­பூ­சி­கள் கிடைக்­கும் என்­றும் அந்த அறிக்கை கூறு­கிறது.

கோவாக்ஸ் திட்­டத்­தின் மூலம் இந்த ஆண்டு மியன்­மா­ரின் 20 விழுக்­காட்டு மக்­க­ளுக்­குத் தேவை­யான தடுப்­பூ­சி­கள் கிடைக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வதாக ஐநா கூறுகிறது.

மியன்­மா­ரில் திங்­கட்­கி­ழ­மை­அன்று 5,189 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­னர், 281 பேர் தொற்­றால் பலி­யா­கி­னர்.

ஆனால் சட­லங்­க­ளைக் கையாள முடி­யா­மல் தக­னச்­சா­லை­கள் திணறி வரு­வ­தாக கூறும் இறு­திச் சடங்கு நடத்­தும் சேவை­யா­ளர்­கள், உண்­மை­யான பலி எண்­ணிக்கை இதை­விட பல மடங்கு அதி­க­மாக இருக்­கும் என்று கூறு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே, மியன்­மா­ரில் இருந்து சீனா­வின் யூனான் மாநி­லத்­திற்­குத் திரும்­பு­ப­வர்­க­ளால், சீனா­வில் ஜன­வரி மாதத்­திற்கு பிறகு நேற்று ஆக அதிக எண்­ணிக்­கை­யில் தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­னது.