300,000 ஏக்கர் நிலம் தீக்கிரையானது

300,000 ஏக்கர் நிலம் தீக்கிரையானது

1 mins read
d496a3ab-34bd-4157-8cda-e4def6129a21
-

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வின் ஒரி­கன் மாநி­லத்­தில் ஏற்­பட்ட காட்­டுத் தீயில் 340,000 ஏக்­கர் பரப்­ப­ளவு நிலம் தீக்­கி­ரை­யா­னது.

அமெ­ரிக்க வர­லாற்­றில் இது வரை ஏற்­பட்ட மிகப்­பெ­ரிய காட்­டுத்தீ சம்­ப­வங்­களில் ஒன்­றா­கும் இது.

'பூட்­லெக் தீ' என்று அழைக்­கப்­படும் இக்­காட்­டுத் தீயி­னால் பெரும்­பா­லும் கிரா­மப்­பு­றங்­களில் இருந்து குறைந்­தது 2,000 குடி­யி­ருப்­பா­ளர்­கள் வெளி­யேறும் நிலைக்­குத் தள்­ளப்­பட்­ட­னர். குறைந்­தது 160 வீடு­கள் தீக்­கி­ரை­யா­யின.