யங்கூன்: ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரத்தில் ஐந்து கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று முதல் அங்கு முடக்கநிலை உத்தரவு கொண்டு வரப்பட்டுள்ளது.
சிட்னி, மெல்பர்னை தொடர்ந்து தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் தலைநகரமான அடிலெய்ட் நகரத்தின் 14 மில்லியன் மக்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
நேற்று மாலை 6 மணி முதல் முடக்கநிலை கொண்டு வரப்பட்டதாக குறிப்பிட்ட அம்மாநில முதல்வர் ஸ்டீவன் மார்சல் அடுத்த ஏழு நாட்களுக்கு இது நடப்பில் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
25 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஆஸ்திரேலியாவில் வெறும் 11% மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் சமூகளவிலான கிருமிப் பரவல் பெருமளவு கட்டுக்குள்ளேயே உள்ளது. சிட்னியில் இம்மாத இறுதி வரை முடக்கநிலை நடப்பில் இருக்கும் நிலையில், மெல்பர்னில் நேற்று முடிவடையவிருந்த முடக்கநிலை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

