முடக்கநிலையிலும் அதிகரிக்கும் தொற்று

முடக்கநிலையிலும் அதிகரிக்கும் தொற்று

1 mins read
ede8432c-ada7-41ef-b36d-99faf2624ece
படம்: இபிஏ -

ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய நகரங்களில் கடந்த சில நாட்களாக முடக்கநிலை நடப்பில் இருந்தாலும் அங்கு கிருமித்தொற்று ஏறுமுகமாகவே உள்ளது.

ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் முடக்கநிலை உத்தரவால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில், தளர்வுகள் கொண்டுவரப்படும் என்ற நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் அங்கு கிருமிப் பரவல் தீவிரமடைந்து வருகிறது.

கடந்த நான்கு வாரங்களாக முடங்கியுள்ள சிட்னியைத் தலைநகரமாகக் கொண்ட நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இன்று 110 புதிய தொற்று சம்பவங்கள் பதிவானது. நேற்று அந்த எண்ணிக்கை 78ஆக இருந்தது.

அதுபோல் நேற்று 9 தொற்று சம்பங்கள் மட்டுமே பதிவான விக்டோரியா மாநிலத்தில். இன்று 22 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகினர். அங்கு கிட்டத்திட்ட இரண்டு வாரகாலமாக முடக்கநிலை உள்ளது.