சீனாவில் ஆயிரம் ஆண்டு காணாத மழைக்கு 25 பேர் பலி, அணை உடையும் அபாயம்

பெய்­ஜிங்: மத்­திய சீன மாநி­ல­மான ஹெ­னான் மாநி­லத்­தில் பெய்த தொடர் கன­மழை கார­ண­மாக அந்­ந­க­ரம் முழு­வ­துமே வெள்­ளத் தில் தத்­த­ளிக்­கிறது.

இது ஆயி­ரம் ஆண்டு காணாத கன­மழை என்று பரு­வ­நிலை கண்­கா­ணிப்­பா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

ஹெ­னான் மாநி­லத்­தின் செங்­சாவ் நக­ரத்­தில் ஒரு மணி நேரத்­தில் 20 செ.மீ. மழை பெய்து தீர்த்­தது.

வெள்­ளப்பெருக்கில் பல கார்­கள், வாக­னங்­கள் அடித்­துச் செல்­லப்­பட்­டன. செங்­சாவ் நக­ரத்­தின் சுரங்க ரயில் பாதைக்­குள் வெள்­ள­நீர் புகுந்­­தது. எனவே அந்த ரயில் பாதை­யில் மின்­சா­ர­மும் துண்­டிக்­கப்

­பட்­டது.

அப்­போது சுரங்­கப் பாதைக்­குள் இருந்த ரயி­லுக்­குள் நீர் புகுந்­த­தை­ய­டுத்து, பய­ணி­கள் இடுப்­ப­ளவு நீரில் தத்­த­ளித்­த­னர். இந்த வெள்­ளத்­தில் சிக்கி இது­வரை 12 பேர் உயி­ரி­ழந்­த­னர். 500க்கும் மேற்­பட்­ட­வர்­கள் பத்­தி­ர­மாக மீட்­கப்­பட்­ட­னர்.

இவர்­கள் உட்­பட மழை வெள்­ளத்­திற்கு 25 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

இதற்­கி­டையே ஆறு­கள் நிரம்பி வழி­வ­தா­க­வும் யிஹெட்­டான் அணை­யின் நீர்­மட்­டம் அபாய அள­வைத் தாண்­டி­விட்­ட­தால், எந்­நே­ர­மும் அணை உடை­யக்­கூ­டும் என்று சீன ராணு­வம் எச்­ச­ரித்­துள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!