சிட்னி: 2032ஆம் ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பனில் நடைபெறும் என்று அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் அறிவித்துள்ளது.
மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.
1956ஆம் ஆண்டு மெல்பர்னிலும் 2000ஆம் ஆண்டு சிட்னியிலும் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன. 2018ல் காமன்வெல்த் போட்டிகள் பிரிஸ்பனில் சிறப்பாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அனுமதி கிடைத்துள்ளது.

