சீனாவின் நாஞ்ஜிங் நகரத்தில்
18 விமான நிலைய ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை யடுத்து பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
பெகஸாஸ் உளவு செயலி மூலம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரான்ஸ் அதிபர் மெக்ரோன் உள்ளிட்ட 10 நாடுகளின் பிரதமர்கள், 3 அதிபர்கள், ஒரு நாட்டின் மன்னர் உட்பட பலர் உளவு பார்க்கப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி கூறுகிறது.
மூடப்பட்ட ஆப்பிள் டெய்லி நாளிதழின் முன்னாள் நிர்வாக ஆசிரியரை ஹாங்காங் போலிசார் கைது செய்தனர்.
தோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் சாஃப்ட்பால் விளையாட்டில் பெண்கள் பிரிவு ஆட்டத்தை ஜப்பான் அணியினர் வென்றனர்.

