தத்தளிக்கும் சீனாவை மிரட்டும் புயல், மழை எச்சரிக்கை

தத்தளிக்கும் சீனாவை மிரட்டும் புயல், மழை எச்சரிக்கை

2 mins read
d379976e-3459-4bdf-8775-e9b97e002095
ஹெனான் மாநிலத்தில் ஜெங்ஜோ நகரத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து குழந்தையுடன் வெள்ளத்தைக் கடந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்லும் ஆடவர்.படம்: ராய்ட்டர்ஸ் -

பெய்­ஜிங்: சீனா­வின் ஹெனான் மாநி­லத்­தில் கிட்­டத்­தட்ட ஒரு­வா­ர­மாக கொட்­டித் தீர்த்த கன­ம­ழைக்கு 33 பேர் மாண்­டு­விட்ட நிலை­யில், தற்­போது அம்­மா­நி­லத்­தின் வடக்கு நக­ரங்­களில் புயல் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

மாநில வானிலை ஆய்வு மையம் ஹெனா­னின் வடக்­கில் உள்ள ஜின்க்­சி­யாங், அன்­யாங், ஹெபி மற்­றும் ஜியா­வோ­சுவோ ஆகிய நான்கு நக­ரங்­க­ளுக்கு புயல் எச்­ச­ரிக்­கையை விடுத்­துள்­ளது. அங்கு அதிக அபாய அள­வான சிவப்பு நிற எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் மழை பெய்­யும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

ஹெனான் மாநி­லத்­தில் இது­வரை பெய்த கன­ம­ழை­யால் 1.22 பில்­லி­யன் யுவான் (S$257 மில்­லி­யன்) பொரு­ளா­தார இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக சின்­ஹுவா செய்தி நிறு­வ­னம் கூறு­கிறது.

பல லட்­சம் ஏக்­க­ரில் பயி­ரி­டப்­பட்­டி­ருந்த பயிர்­கள் நாச­மா­கி­விட்­டன. சாலை­கள், ரயில் பாதை­கள் மோச­மாக சேத­ம­டைந்து உள்­ளன.

கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்ட ஜெங்ஜோ நக­ரத்­தில் வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்­பட்ட கார்­கள் சாலை­களில் ஆங்­காங்கே குவி­யல் குவி­ய­லாக கிடந்­தன.

கன­மழை கார­ண­மாக மின்­சா­ர­மும் துண்­டிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை வெகு­வாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

சுரங்கப் பாதை ஊழி­யர்­கள் பலி

இதற்­கி­டையே, தெற்கு சீனா­வில் கட்­டு­மா­னப் பணி நடந்­து­கொண்­டி­ருந்த ஷிஜிங்­சன் சுரங்­கப்

பாதை­க்குள் நீர் சூழ்ந்­ததையடுத்து அதில் சிக்­கிக்­கொண்ட 14 ஊழி­யர்­களும் மாண்­டு­விட்­ட­தா­க­வும் அவர்­க­ளின் சட­லங்­கள் மீட்­கப்­பட்­டு­விட்­ட­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

ஆனால் குவாங்­டாங் மாநில நீர்­தேக்­கத்­திற்கு அடி­யில் கட்­டப்­பட்டு வந்த சுரங்­கப் பாதை­யில் நீர் எப்­படி புகுந்­தது என்­பது குறித்து அதி­கா­ரி­கள் எது­வும் கூற­வில்லை.

ஜூலை 15ஆம் தேதி நடந்த இந்த விபத்­தில் சிக்­கி­ய­வர்­களை மீட்­கும் பணி­யில் பலர் ஈடு­ப­டுத்­தப்

பட்­ட­தற்கு எந்த பல­னும் கிடைக்க வில்லை.