அரசாங்க ஆதரவாளர்களுக்கு சிறை
ஹாங்காங்: ஜனநாயக ஆதரவாளர்கள், ரயில் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதாக அரசாங்க ஆதரவாளர்கள் ஏழு பேருக்கு ஹாங்காங் நீதிமன்றம் நேற்று சிறை தண்டனை விதித்தது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் யுயென் லாங் நகரில் நடந்த ஒரு ஜனநாயக பேரணியில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் மீது வெள்ளை சட்டை அணிந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது தொடர்பில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
வடகொரியாவில் அனல்காற்று
பியோங்யாங்: வடகொரியா முழுவதும் வரும் வாரத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அங்கு சென்ற வாரம் 35 டிகிரி செல்சியஸ் என்ற சராசரி வெப்பநிலையைவிட அதிகமான வெப்பநிலை நிலவியதாகவும் இனி வரும் நாட்களில் அது மேலும் அதிகரிக்கும் என்பதால் அனல்காற்றை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
காட்டுத்தீ; வெளியேறும் மக்கள்
மாண்ட்ரியல்: காட்டுத்தீ காரணமாக மேற்கு கனடாவிலும் அமெரிக்காவிலும் ஆயிரக்கணக்கானவர்கள் தங்களது வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். ஏற்கெனவே அனல் காற்றைச் சமாளிக்க முடியாமல் திணறும் மக்கள் காட்டுத் தீயின் அனலைப் பொறுத்துக்கொள்ள முடியாமலும் தங்களது பாதுகாப்பை முன்னிட்டும் இருப்பிடங்களைவிட்டு வெளியேறி வருகின்றனர். கலிஃபோர்னியா, ஓரிகன், மொன்டானா, நெவாடாவில் ஏற்பட்டுள்ள 80 பெரும் காட்டுத்தீ சம்பவங்களால் சுமார் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் அழிந்துவிட்டன.
மியன்மாரில் மருத்துவர்கள் கைது
யங்கூன்: ராணுவ ஆட்சிக்கு எதிராக மருத்துவர் களின் ஆதரவால் கோபமடைந்த மியன்மார் ராணுவம், தனிப்பட்ட முறையில் கொவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்து வந்த மருத்துவர்கள் ஒன்பது பேரைக் கைது செய்ததாக சக ஊழியர்கள் மற்றும் ஊடகங்கள் கூறுகின்றன. குறிப்பிட்ட சில சூழ்நிலைகளால் மருத்துவமனைக்குச் செல்ல முடியாத
வர்களுக்கு தொலைதூர மருத்துவ ஆலோசனை வழங்கி வந்த அவர்கள் யங்கூன், மண்டேலே பகுதியைச் சேர்ந்த
வர்கள் என்று அவர்கள் தெரிவித்தனர். யங்கூனில் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டதை மறுத்துள்ள ராணுவம் மண்டேலே கைது பற்றி எதுவும் கூறவில்லை.

