ஆகக் குறைவான தடுப்பூசி விகிதம்: மன்னிப்பு கோரிய ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன்

ஆகக் குறைவான தடுப்பூசி விகிதம்: மன்னிப்பு கோரிய ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன்

1 mins read
75a1b4ca-4531-4500-9afd-af2b0b288865
-

சிட்னி: தடுப்­பூசி போடும் பணி மந்­த­மாக நடை­பெற்று வரு­வ­தற்­காக ஆஸ்­தி­ரே­லிய பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் மன்­னிப்பு கோரி­யுள்

ளார்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் இது­வரை 11 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர். அதா­வது பணக்­கார நாடு­கள் பட்­டி­ய­லில் ஆக குறை­வான தடுப்­பூசி விகி­தம் கொண்ட நாடாக உள்­ளது ஆஸ்­தி­ரே­லியா.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைச் சிறப்­பாக கையாண்­ட­தாக பெருமை கொண்டு இருந்த மோரி­ச­னுக்கு, தடுப்­பூசி இயக்­கத்­தைத் தீவி­ரப்

படுத்­து­வ­தற்­குக் கடு­மை­யான நெருக்­கடி எழுந்­துள்­ளது.

"இந்த ஆண்­டின் தொடக்­கத்­தில் எதிர்­பார்த்த இலக்கை அடைய முடி­ய­வில்லை என்­ப­தற்­காக வருந்­து­கி­றேன்.

"சொல்­லப் போனால், சில விஷ­யங்­கள் நம் கட்­டுப்­பாட்­டில் உள்­ளன, சில விஷ­யங்­கள் இல்லை," என்­றார் மோரி­சன்.

சிட்­னி­யில் கிரு­மித்­தொற்று மேலும் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்­றும் கட்­டுப்­பா­டு­கள் நீண்ட நாட்­க­ளுக்கு இருக்­கக்­கூ­டும் என்­றும் சிட்னி அதி­கா­ரி­கள் எச்­ச­ரித்­துள்ள நிலை­யில் மோரி­சன் இவ்­வாறு கூறி­யுள்­ளார்.

நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தில் நேற்று சுமார் 124 பேர் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கி­னர். கடந்த 16 மாதங்களில் பதிவான ஆக அதிக எண்ணிக்கையாகும் இது.

வரும் நாட்­களில் இந்த எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கக்

கூடும் என்று எச்­ச­ரித்­துள்­ளார் அம்­மா­நில முதல்­வர் கிளா­டிஸ் பெரெ­ஜிக்­லி­யன்.

பெரும்­பா­லோ­ருக்­குத் தடுப்­பூசி போடாத வரை­யில் நாம் கிரு­மிப் பர­வ­லுக்­கான சில கட்­டுப்­பாடு

களோ­டு­தான் வாழ்ந்­தாக வேண்­டும் என்­றும் அவர் சொன்­னார்.

அதுபோல் விக்டோரியா மாநிலத்திலும் தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 22ஆக இருந்த இந்த எண்ணிக்கை, 26ஆக உயர்ந்

தது.