'ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது'

'ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது'

1 mins read
6e935299-c40b-4899-9441-ff9347bf69d1
-

வாஷிங்­டன்: ஆப்­கா­னிஸ்­தான் மாவட்­டங்­களில் பாதி தலி­பான் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளின் கட்­டுப்­பாட்­டில் உள்­ள­தாக அமெ­ரிக்க படை­க­ளின் மூத்த தள­பதி மார்க் மில்லி கூறி­யுள்­ளார். மோச­ம­டைந்து வரும் பாது­காப்பு நிலை­மை­யை இது குறிப்­ப­தா­க­வும் அவர் சொன்­னார்.

419 மாவட்­டங்­களில் 200க்கும் மேற்­பட்ட இடங்­கள் தலி­பான் படை­யி­ன­ரின் கட்­டுப்­பாட்­டில் இருப்­ப­தாக அவர் சொன்­னார்.

சென்ற மாதம் 81 மாவட்­டங்­கள் தலி­பான்­க­ளின் கட்­டுப்­பாட்­டில் இருப்­ப­தாக அவர் கூறி­யி­ருந்­தார். அமெ­ரிக்­கப் படை­கள் வெளி­யே­றி­ய­தில் இருந்து அங்கு தலி­பான் படை­ முன்­னேறி வரு­கிறது.