மலேசியா: புதிதாக 15,573 பேருக்குக் கொரோனா

மலேசியா: புதிதாக 15,573 பேருக்குக் கொரோனா

1 mins read
acb985fb-953b-4b43-b521-5e12aad0b3b9
-

மலேசியாவில் புதிதாக 15,573 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. தொற்றுநோய்க்காலம் தொடங்கியது முதல் இதுவரை அது ஆக அதிகமான எண்ணிக்கையாக உள்ளது.

மலேசியாவில் இதுவரை மொத்தம் 980, 491 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மலேசியாவிலுள்ள பெரியவர்களில் பாதிப் பேர், ஒரு முறையாவது தடுப்பூசி போட்டுக்கொள்ளும் இலக்கை நோக்கி நெருங்கி வருவதாகப் பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்தார்.