மலேசியாவில் கொவிட்-19 தொற்று மீண்டும் புதிய உச்சம்

மலேசியாவில் கொவிட்-19 தொற்று மீண்டும் புதிய உச்சம்

1 mins read
0c915166-2650-4454-8a6c-1591111cb81c
மலேசியாவில் இன்று (ஜூலை 24) மற்றொரு புதிய உச்சமாக 15,902 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

மலேசியாவில் இன்று (ஜூலை 24) மற்றொரு புதிய உச்சமாக 15,902 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அங்கு நேற்று 15,573 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக மலேசியாவில் கிருமித்தொற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

மலேசியாவில் ஆக அதிக மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் கிள்ளான் பள்ளத்தாக்கில்தான் அதிகமானோருக்குத் தொற்று பதிவாகி வருகிறது. இன்று பதிவான கிருமித்தொற்று எண்ணிக்கையில் அந்தப் பகுதி 65 விழுக்காடு அங்கம் வகிக்கிறது.

கிள்ளான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த சிலாங்கூரிலும் கோலாலம்பூரிலும் கிட்டத்தட்ட 10,000 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகிருமித்தொற்று