தடுப்பூசி போடும் இலக்கை எட்ட தடுமாறும் இந்தோனீசியா

ஜகார்த்தா: சீரற்ற பகிர்வு, அதிகரித்து வரும் தடுப்பூசிக்கு எதிரான உணர்வு, சிக்கலான அதிகாரத்துவம் ஆகியவை இந்தோனீசியாவின் தடுப்பூசி போடும் முயற்சிகளுக்கு இடையூறாக உள்ளது.

சுகாதார அமைச்சின் அறிக்கைப்படி, இதுவரை 16 மில்லியன் பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 26 மில்லியன் பேர் முதல் முறை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் சுமார் 208 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தோனீசியா.

அதை எட்டும் வகையில், அடுத்த மாதம் முதல் அங்கு நாளொன்றுக்கு 2 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், நாடு முழுவதிற்குமான தடுப்பூசி பகிர்வு சீராக முறையில் இல்லை என்று கூறப்படுகிறது.

ஜகார்த்தாவில் இரண்டு மில்லியன் பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள நிலையில், மலாங்கில் வெறும் 64,000 பேருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மத்திய அரசிடமிருந்து தங்களுக்குப் போதிய அளவு தடுப்பூசி வந்து சேரவில்லை என்கிறார் மலாங்கின் தலைமை சுகாதார அதிகாரி ஹஸ்னுல் முரிஃப்.

இதற்கிடையே, தடுப்பூசியினால் நீண்டகால பக்கவிளைவுகள் ஏற்படும் என்ற ஆதாரமற்ற தகவல்களை நம்பும் சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இதுதவிர ஒரு சில மாநிலங்களில் அங்கு வசிப்பதற்கான அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது.

இதுபற்றி பேசிய சுகாதார அமைச்சர் ஷாதிகின் தடுப்பூசி போடும் பணிக்கு இடையூறாக இருக்கும் சவால்களைக் களைவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!