ஒலிம்பிக்கின் முதல் தங்கத்தை வென்றது சீனா

ஒலிம்பிக்கின் முதல் தங்கத்தை வென்றது சீனா

1 mins read
91f43d0f-27af-4811-b5f2-34bcf4e056bb
மகளிர் 10 மீ. ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதலுக்கான இறுதிப்போட்டியில் தங்கம் வென்ற சீன வீராங்கனை யாங் கிங். படம்: இபிஏ -
Google News Preferred Icon

தோக்கியோ: தோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் முதல் தங்கப் பதக்கத்தைத் தனதாக்கிக் கொண்டது சீனா.

மகளிர் 10 மீ. ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதலுக்கான இறுதிப்போட்டியில் தென்கொரியா, நார்வே, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 8 வீராங்கனைகள் போட்டியிட்டனர்.

இறுதி போட்டியில் சீனாவைச் சேர்ந்த யாங் கிங் 251.8 புள்ளிகள் பெற்று ஒலிம்பிக் சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கத்தையும் வென்று அசத்தினார்.

இதன்மூலம் தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப்

பதக்கத்தை சீனா வென்றது.

ரஷ்யாவைச் சேர்ந்த கைலாஷினா அனஸ்டாசிட்ட 251.1 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நினா கிறிஸ்டென் 230.6 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இப்போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை அடீல் டான் 625.3 புள்ளிகளுடன் 21வது இடத்தில் முடித்தார். இப்போட்டியில் சிங்கப்பூரின் ஆகச் சிறந்த பதிவு இது.

இந்தியாவின் முன்னணி வீராங்கனையான இளவேனில் வாலறிவன், உலக சாதனை படைத்த அபூர்வி சந்தேலா ஆகியோர் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.

626.5 என்ற புள்ளிகளுடன் 16வது இடத்தில் முடித்த இளவேனில் வாலறிவன் 2 புள்ளிகளில் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டார்.