மலேசியாவில் புதிதாக 17, 045 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பதாக இன்று பதிவாகியுள்ளது. இதுவே கிருமித்தொற்றின் ஆரம்பம் முதல் அந்நாட்டில் பதிவாகியுள்ள ஆக அதிகமான எண்ணிக்கை. இதனுடன் அந்நாட்டின் கிருமித்தொற்று எண்ணிக்கை 1,013, 438க்கு அதிகரித்துள்ளது.
சிலாங்கூரில் புதிதாக 8,500 சம்பவங்களும் கோலாலம்பூரில் 2,045 சம்பவங்களும் கெடாவில் 1, 216 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. வெள்ளிக்கிழமை முற்பகுதியில் டெல்ட்டா வகையைச் சேர்ந்த முதல் கிருமித்தொற்று கிளந்தானில் பதிவாகியுள்ளது. பாசிர் புத்தே வட்டாரத்தைச் சேர்ந்த அந்தப் பெண், இதற்கு முன்னதாக கொவிட்-19 கிருமியால் பாதிக்கப்பட்டிருந்தார்.
டெல்ட்டா கிருமித்தொற்று சமூகத்தில் பரவுவது குறித்து கவலைப்படும் அதிகாரிகள், தொடர்ந்து முகக்கவசம் அணிவதையும் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

