முகைதீனின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் சாத்தியம் குறைவு

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் நாடாளுமன்­றம் இவ்­வாண்டு முதல்­மு­றை­யாக இன்று கூடுகிறது.

இருப்­பி­னும், இந்த ஐந்து நாள் சிறப்பு அமர்வு பலன் தரும் என்ற நம்­பிக்கை மலே­சி­யர்­கள் பல­ருக்கு இல்லை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மலே­சி­யாவை உலுக்­கி­வ­ரும் கொவிட்-19 நெருக்­க­டி­நிலை,

நலி­வுற்­றி­ருக்­கும் பொரு­ளி­யல் ஆகி­யவை தொடர்­பாக எவ்­வித முடி­வும் எடுக்­கப்­ப­டாது என்ற சந்­தே­கம் பர­வ­லாக இருக்­கிறது.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை மோச­ம­டைந்து வரு­வ­தால்

மாமன்­னர் அப்­துல்லா அக­மது ஷா நெருக்­கு­தல் தந்த பிறகு,

நாடா­ளு­மன்­றத்­தைக் கூட்ட மலே­சி­யப் பிர­த­மர் முகை­தீன் யாசின் இம்­மா­தம் இணக்­கம் தெரி­வித்­தார்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லையை எதிர்­கொள்­வ­தா­கக் கூறி, மலே­சி­யா­வில் கடந்த ஜன­வரி மாதம் அவ­ச­ர­நிலை பிர­க­ட­னம் செய்­யப்­பட்­டது.

இருப்­பி­னும், கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்­கை­யும் உயி­ரி­ழப்­பு­களும் அதி­க­ரித்­துள்­ளன.

இன்று தொடங்­கும் ஐந்து நாள் அமர்­வில் விவா­தங்­கள் நடை­

பெ­று­வ­தற்­கான சாத்­தி­யம் மிக­வும் குறைவு என்று கூறப்­ப­டு­கிறது. அமைச்­சர்­நிலை கேள்வி-பதில் நேரம், மசோ­தாக்­களை சட்­ட­மாக்க நடத்­தப்­படும் வாக்­கெ­டுப்­பு­கள் ஆகி­யவை நடை­பெ­றாது என்று கூறப்­

ப­டு­கிறது.

இத­னால் பெரும்­பா­லான நாடாளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவு பிர­த­மர் முகை­தீ­னுக்கு இருக்­கி­றதா என்ற சந்­தே­கம்

நில­வுகின்றபோதிலும் அவ­ரது

பத­விக்கு ஆபத்து ஏற்­ப­டாது என்று நம்­பப்­ப­டு­கிறது.

அவ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­இல்லா வாக்­கெ­டுப்பு நடை­பெ­றும் சாத்­தி­யம் மிக­வும் குறைவு என்று அர­சி­யல் விமர்­ச­கர்­கள் கூறு­கின்­ற­னர்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லைக்கு எதி­ராக மலே­சியா எடுத்­து­வ­ரும் நட­வ­டிக்­கை­க­ளுக்­குத் தலை­மை­தாங்­கும் பல மூத்த அமைச்­சர்­கள் அது­கு­றித்து நாடா­ளு­மன்­றத்­தில் பேசு­வர் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 12 அவ­ச­ர­கா­லச் சட்­டங்­கள் குறித்து இன்று அறி­விக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அவ­ச­ர­நி­லை­யின்­போது இவை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­ட­தால் இவை குறித்து நாடா­ளு­மன்­றத்­தில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டாது.

தேசிய மீட்­சித் திட்­டம் குறித்து திரு முகை­தீன் இன்று பேசு­வார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யி­லி­ருந்து மீண்­டு­வ­ரு­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­படும் திட்­டங்­கள் குறித்து அவர் விளக்­கம் அளிப்­பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மலே­சி­யா­வில் பிர­க­ட­னம் செய்­யப்­பட்­டுள்ள அவ­ச­ர­நிலை அடுத்த மாதம் 1ஆம் தேதி­யு­டன்

முடி­வ­டைய இருக்­கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!