கனமழையால் பிலிப்பீன்ஸில் மூவர் மரணம், ஐவர் காயம்

கனமழையால் பிலிப்பீன்ஸில் மூவர் மரணம், ஐவர் காயம்

1 mins read
114fbe77-2ab8-41e4-9a83-f06c7e8bfab4
துயர்துடைப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ள மக்கள்.படம்: இபிஏ -

மணிலா: பிலிப்­பீன்­ஸின் வடக்­குப் பகு­தி­யில் பெய்த கன­மழை கார­ண­மாக குறைந்­தது மூவர் மாண்ட­ னர். ஐந்து பேர் காய­முற்­ற­தாக அந்­நாட்டு அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

கன­ம­ழை­யு­டன் புய­லும் தாக்­கி­ ய­தில் தலை­ந­கர் மணிலா உட்­பட நாட்­டின் பல்­வேறு பகு­தி­களில் வெள்­ளம் ஏற்­பட்­டது.

தாழ்­வான பகு­தி­களில் வாழும் மக்­கள் தங்­கள் வசிப்­பி­டங்­க­ளி­

லி­ருந்து வெளி­யே­றும் நிலை ஏற்­பட்­டது.

மணி­லா­வில் வெள்­ளம் இடுப்­

ப­ளவு உயர்ந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

சாலை­களில் வெள்­ள­ம் புகுந்­த­தால் போக்­கு­வ­ரத்து மிகக் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டது.

மரம் ஒன்று வேராடு சாய்ந்து கார் மீது விழுந்­த­தில் அந்­தக் காருக்­குள் இருந்­த­வர் மாண்­ட­தாக பிலிப்­பீன்­ஸின் தேசிய பேரி­டர் நிர்­வாக அமைப்­பின் இயக்­கு­நர் ரிகார்டோ ஜலாட் செய்­தி­யா­ளர்

­க­ளி­டம் தெரி­வித்­தார்.

மின்­னல் தாக்கி இரு­வர் மாண்­ட­தா­க­வும் அவர் கூறி­னார்.

கன­ம­ழை­யால் லுசோன் தீவில் உள்ள 212 கிரா­மங்­க­ளைச் சேர்ந்த ஏறத்­தாழ 88,000 பேர் கடு­மை

­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைப்பு கூறி­யது.

கிட்­டத்­தட்ட 25,000 பேர் வெளி­யேற்­றப்­பட்டு துயர்­து­டைப்பு முகாம்­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது.