துனீசியாவைக் காப்பாற்ற நன்கொடை முயற்சி

துனீசியாவைக் காப்பாற்ற நன்கொடை முயற்சி

1 mins read
2ed81cfb-c42c-47e4-9d78-794b84c4fe27
-

துனீஸ்: மோச­ம­டைந்து வரும் கொவிட்-19 பாதிப்­பின் கார­ண­மாக துனீசி­யா­வின் சுகா­தா­ரக் கட்­ட­மைப்பு முடங்­கும் அபா­யம் ஏற்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், துனீசி­யா­வுக்கு கைகொ­டுக்க மற்ற நாடு­கள் முன்­வந்­துள்­ளன.

ஐரோப்­பிய நாடு­கள், அரபு நாடு­கள் ஆகி­யவை மட்­டு­மல்­லாது வெளி­நா­டு­களில் வசிக்­கும்

துனீ­சி­யர்­களும் உத­விக்­க­ரம்

நீட்­டி­யுள்­ள­னர்.

மருத்­து­வச் சாத­னங்­கள், தடுப்­பூசி போன்­ற­வற்றை துனீ­சி­யா­வுக்கு நன்­கொடை வழங்க ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

12 மில்­லி­யன் மக்­கள்­தொ­கை­யைக் கொண்­டுள்ள துனீ­சியா, போது­மான தடுப்­பூசி இல்­லா­மல் திண்­டா­டு­கிறது.

தற்­போது மூன்று மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான தடுப்­பூ­சி­கள் நன்­கொடை வழங்­கப்­பட்­டுள்­ளன.

அடுத்த மாதத்­துக்­குள் நன்­கொடை வழங்­கப்­படும் தடுப்­பூ­சி­ க­ளின் எண்­ணிக்கை ஐந்து மில்­லி­ய­னாக உய­ரும் என்று துனீசி­யா­வின் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

சீனா­வும் ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­களும் தலா 500,000 தடுப்­பூ­சி­களை நன்­கொடை வழங்­கி­யுள்­ளன.

துனீசி­யா­வின் அண்டை நாடான அல்­ஜீ­ரியா 250,000 தடுப்­பூ­சி­களை நன்­கொடை வழ­ங்கி உள்­ளது.