தீவிர சிகிச்சைப் பிரிவுகளை விரிவாக்கும் இந்தோனீசியா

தீவிர சிகிச்சைப் பிரிவுகளை விரிவாக்கும் இந்தோனீசியா

1 mins read
bfc26a6f-9f41-4cac-935c-637672c58b25
-

ஜகார்த்தா: கடந்த ஒரு வார­மாக இந்­தோ­னீ­சி­யா­வில் இதற்கு முன் இல்­லாத அள­வுக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை அதி­கரித்­துள்­ளது.

நிலைமை மோச­ம­டைந்து வரு­வ­தால் கூடு­தல் தீவிர சிகிச்­சைப் பிரி­வு­களை இந்­தோ­னீ­சியா தயார் செய்து வரு­கிறது.

டெல்டா வகை கிருமி

இந்­தோ­னீ­சி­யா­வில் வேக­மா­கப் பர­வி­வ­ரு­கிறது.

இதன் விளை­வாக அந்­

நாட்­டில் உள்ள மருத்­து­வ­ம­னை­களில் இடம் இல்­லா­மல் நோயாளி­ கள் பலர் தவிக்­கின்­ற­னர். குறிப்­பாக, மக்­கள் தொகை அதி­கம் உள்ள ஜாவா தீவில் நிலைமை மோச­மாக உள்­ளது.

"மருத்­து­வ­ம­னை­களில்

படுக்­கைப் பற்­றாக்­குறை, சுய­மாக தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­வோர் எவ்­வித கண்­கா­ணிப்­பும் இன்றி மர­ண­ம­டை­வது போன்ற கார­ணங்­க­ளால் இந்­தோ­னீ­சி­யா­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் நிக­ழும் உயி­ரி­ழப்­பு­கள் அதி­க­ரித்­துள்­ளன," என்று இந்­தோ­னீ­சி­யா­வின் மூத்த அமைச்­சர் லுஹுட் பண்ட்­ஜாய்ட்­டான் நேற்று

முன்­தி­னம் தெரி­வித்­தார்.