ஹனோய்: அமெரிக்காவிட
மிருந்து கூடுதல் கொவிட்-19 தடுப்பூசி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்காவுக்கான வியட்னாமிய தூதர் திரு ஹா கிம் நோக் நேற்று தெரிவித்தார். இந்தத் தடுப்பூசிகளை
அமெரிக்கா நன்கொடையாக வழங்கும் என்று நம்பப்படுகிறது.
மளமளவென அதிகரித்து வரும் கொவிட்-19 பாதிப்பை எதிர்த்து வியட்னாம் போராடி வருகிறது. டெல்டா வகை கிருமி யால் வியட்னாம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 கிருமித்தொற்று முதன்முதலாகத் தலைதூக்கியபோது அந்நோயை வியட்னாம் கட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால் தற்போது நிலைமை
முற்றிலும் மாறிவிட்டது. அங்கு பலருக்கு கிருமித்தொற்று
ஏற்பட்டுள்ளது.
நேற்று அமெரிக்காவிலிருந்து மூன்று மில்லியன் மொடர்னா தடுப்பூசிகள் வியட்னாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதன்மூலம் உலகளாவிய கொவாக்ஸ் தடுப்பூசி திட்டத்தின்கீழ் வியட்னாமுக்கு ஐந்து
மில்லியன் தடுப்பூசிகள்
அனுப்பப்பட்டுள்ளன.
"கூடுதல் தடுப்பூசிகளை நன்கொடை வழங்குவது குறித்து அமெரிக்கா பரிசீலலனை செய்து வருகிறது," என்றார் திரு ஹா.

